Kayal: தன் தாயை எச்சரிக்கும் எழில்.. கலங்கி நிற்கும் கயல்.. கயல் சீரியலின் இன்றைய எபிசோட்
Kayal: தன் தாய் சிவசங்கரியை அவரது அலுவலகம் சென்று எச்சரித்து இருக்கிறார், எழில். அதன்பின் கயல் சீரியலில் என்ன நடக்கும் என்பதுவே கயல் சீரியலின் இன்றைய எபிசோட் ஆகும்.

Kayal: தன் தாயை எச்சரிக்கும் எழில் பற்றியும், கலங்கி நிற்கும் கயல் பற்றியும், கயல் சீரியலின் இன்றைய எபிசோட் குறித்துப் பார்ப்போம்.
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் இரவு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோட்:
கயல் சீரியலின் நாயகியான கயலிடம் கெளதம் தவறாக நடக்க வந்தது எழிலுக்கு தெரியவந்துவிட்டது. அதை எப்படியோ எழில் கண்டுபிடித்துவிட்டார். அதன்பின், கெளதமை பிடித்து இரண்டு அடி அடித்து, ’கயலை ஏன் இப்படி செய்தாய், அவளை ஏன் சிறையில் சிக்க வைத்தாய்’ எனக் கேட்ட எழிலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், இவ்வாறு பிரச்னைகளை செய்யசொன்னதே எழிலின் தாய் சிவசங்கரி தான் என கெளதம் சொல்லிவிட்டார்.
இப்படி, கயல் சீரியலின் கதாநாயகனான எழில், கயலை கரம்பிடித்தபிறகு, கயலை ஜெயிலில் வைக்க எழிலின் தாயார் சிவசங்கரி திட்டம் போட்டதைக் கண்டுபிடிக்கிறார்.
சிவசங்கரியின் அலுவலகம் சென்ற எழில்:
நேராக தன் மனைவி கயலை அழைத்துக்கொண்டு சிவசங்கரியின் அலுவலகம் செல்லும் எழில், அங்கு மீட்டிங்கில் அவரது பணியாளர் முன் வைத்து சிவசங்கரியை, ’நீயெல்லாம் ஒரு தாயா’ எனக் கேட்டு அசிங்கப்படுத்துகிறார். அதற்குப் பதிலளிக்கும் சிவசங்கரி, ‘உன்னைக் காதலிக்கிறேன்னு ஆசைவார்த்தை சொல்லி மொத்தமாக உன்னை என்கிட்டயிருந்து பிரிச்சிட்டா’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
அப்போது அதிரடியாகப் பேசும் எழில், ‘இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங். இதுக்கப்புறம் கயலை பழிவாங்கணும்னு ஏதாவது பண்ணுனீங்க, நான் உங்களை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.’ என மிரட்டுகிறார்.
அடுத்த காட்சியில், கயல் எழில் தம்பதியினர், கயல் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது உணவருந்தும் மேடையில் வைத்து கயலின் அண்ணன் மூர்த்தி, ’கயல் நகை எடுக்க பணம் ரெடி பண்ணீட்டியா’ எனக்கேட்கிறார். அதற்குப் பதில் அளிக்கும் கயல், ‘பண்ணிட்டேன் மூர்த்தி’ என்கிறார். உடனே பதிலளிக்கும் மூர்த்தி’ வீட்டுக்கு மூத்தபையனாக நான் தான் இதை ரெடிசெய்திருக்கணும்’ என குற்றவுணர்ச்சியில் புலம்புகிறார்.
நேற்றைய எபிசோட்:
பிப்ரவரி 7ஆம் தேதிக்கான கயல் சீரியலில் ஹைலைட்டாக, நீ ஏதோ ஒன்றை மறைக்கிறாயா என கயலிடம் கேட்கிறார், அவரது காதல் கணவன் எழில்.
அப்போது உண்மையை மட்டும் தான் சொல்ல வேண்டும் என்றும்; உனக்கு ஏற்பட்ட களங்கத்தை ஏற்படுத்தியவர் யார் என்று உனக்குத் தெரியும் என்றும் அதை வெளியில் சொல் என்றும் எழில் கயலிடம் கட்டளையிடுகிறார்.
அப்போது கயல், ஒரு லேடி தான் கால் பண்ணி என்னை அந்த இடத்துக்கு வரச்சொன்னாங்க என்று நடந்ததை மறைக்கிறார், கயல். அப்போது எழில் துருவித்துருவி கேட்கிறார். மேலும், ஒரு பெண்ணை ஒரு சிக்கலான இடத்துக்கு வரச்சொல்லி போலீஸ் ரெய்டு செய்திருக்கிறார்கள் என்றால் எதுவும் யதார்த்தமாக நடக்கவில்லை என சீரியலின் நாயகன் எழில் ஆணித்தரமாக சொல்கிறான். இதனால் விழிபிதுங்கும் கயல், சொல்வதறியாமல் தவிக்கிறார். மேலும் ‘ உன்னை எதிரியாக நினைக்கும் யாரோ ஒருத்தவங்க தான் உன்னை இப்படி சிக்க வைச்சுட்டாங்க’ என்று எழில் ஆத்திரப்படுகிறார்.
அதன்பின் தன்னை விபச்சார வழக்கில் சிக்கவைத்தது யார் என்று சொல்கிறார். அதன்பின் நடந்த பரபர காட்சிகள் தான் பிப்.7ஆம் தேதி சீரியலில் நடந்தது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்