Top 10 Cinema: காலை இழந்த காமெடி நடிகர் முதல்.. 100 கோடி லிஸ்ட்டில் இணைந்த நடிகர் வரை.. இன்றைய டாப் 10 சினிமா..
Top 10 Cinema: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகர் சிரிக்கோ உதயா தன் காலை இழந்து தவிப்பது முதல் தன் சினிமா கெரியரில் முதல் 100 கோடி ஹிட் அடித்த படத்தை கொண்டாடும் நாக சைதன்யா வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

Top 10 Cinema: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகர் சிரிக்கோ உதயா தன் காலை இழந்து தவிப்பது முதல் தன் சினிமா கெரியரில் முதல் 100 கோடி ஹிட் அடித்த படத்தை கொண்டாடும் நாக சைதன்யா வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
1. காலை இழந்த நடிகர்
குணச்சித்திர நடிகரான சிரிக்கோ உதயா, கடந்த சில நாட்களாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு பாதிப்பு அதிகமாகி தன் காலை இழந்துள்ளார். மேலும், இவர் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். சிரிக்கோ உதயா, சந்தானம் படத்திற்கு காமெடி வசனங்கள் எழுதியுள்ளார். மேலும், இவர் பல பாடல்களுக்கு வயலின் இசைக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
2. லீக் ஆன தனுஷ் பட ஷூட்டிங்
ஹிந்தியில் தனுஷிற்கு 2 பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் ஆனந்த் எல் ராய். தற்போது இவருடன் 3வது முறையாக இணைந்து தேரே இஷ்க் மெயின் எனும் படத்தில் நடக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றிருக்கும் வேளையில் அதன் ஒரு காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
3.யோகி பாபுவுக்கு விபத்து?
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான யோகி பாபு ராணிப்பேட்டை அருகே காரில் சென்ற போது, அவரது கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. தான் நலமுடன் இருக்கேன். என்னைப் பற்றி வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானது எனக் கூறியுள்ளார்.
4. தெலுங்கு பக்கம் செல்லும் சூர்யா
வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் நடிகர் சூர்யா இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டால், இது நடிகர் சூர்யா தெலுங்கில் நேரடியாக நடிக்கும் 2வது திரைப்படமாக அமையும்.
5.முதல் 100 கோடி ஹிட் அடித்த சைதன்யா
நாக சைதன்யா- சாய் பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் தான் நாக சைதன்யா சினிமா வாழ்க்கையில் முதல் 100 கோடி ரூபாயை வசூலித்த படமாகும். இதனை நாக சைதன்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், அமரன் படத்திற்கு பின் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இந்தப் படம் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
6. மன்மதனான நிவின் பாலி
மலையாள நடிகர் நிவின் பாலிக்கு சமீபத்தில் வெளியான எந்தப் படங்களும் பெரிதாக ஹிட் கொடுக்காத நிலையில், தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ஆதித்யன் சந்திரசேகர் இயக்கும் அந்தப் படத்திற்கு மல்டிவெர்ஸ் மன்மதன் என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக, நிவின் பாலியின் உடல் எடையை பலரும் விமர்சித்த நிலையில், தற்போது மீண்டும் ஃபிட் தோற்றத்திற்கு வந்து டபுள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
7. தி. நகரில் அகரம்
நடிகர் சூர்யா, தனது அகரம் அறக்கட்டளை சார்பில் புதிய அலுவலக கட்டடத்தை சென்னை தி நகரில் திறந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, கல்வியே ஆயுதம், கல்வியே கேடயம் எனக் கூறியுள்ளார். மேலும், இது படிப்புக்காக கொடுக்கப்பட்ட நன்கொடையில் வந்த இடம் இது கிடையாது. நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு அதன் வருமானத்தில் இருந்து கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமே இது. நன்கொடையாக வரும் பணம் படிப்புக்காக மட்டுமே செலவிடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
8. ஆண் பாவத்தில் ரியோ
ஜோ படத்தின் மூலம் மக்கள் விரும்பும் ஜோடியாக மாறினர் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ். இந்த ஜோடி தற்போது மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஆண் பாவம் என பெயரிடப்பட்டுள்ளது. ஆண்கள் படும் கஷ்டங்களைப் பற்றி பேசும் படமாக இது அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
9. எஸ்.கேவை வாழ்த்திய சீமான்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நாளை அவரது 40வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அவருக்கு நடிகர், இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் உச்ச நட்சத்திரம் என் ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். அடுத்தடுத்து மக்கள் மகிழும் வெற்றிப்படைப்புகள் பல தந்து சாதனை புரிந்திட அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்! எனக் கூறி வாழ்த்தியுள்ளார்.
10. பேபி ஜான் ஓடிடி
நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் பேபி ஜான் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை. இருப்பினும், தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்காக வெளியாகி இருக்கும் இந்த படத்தைக் காண காத்திருந்த நிலையில், இப்படத்தின் ரெகுலர் ஸ்டிரீமிங் அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்