Fatima Sana Shaikh: “எல்லா விஷயத்துக்கும் ஓகே தான?” ஏஜென்ட் டார்ச்சர் - வாய்ப்புக்கான வலையில் சிக்கிய தங்கல் நடிகை
Actress Fatima Sana Shaikh: நீங்கள் எல்லா விஷயத்துக்கும் ஓகே தான என தன்னை தொடர்பு கொண்ட ஏஜெண்ட் திரும்ப திரும்ப என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தார் என தென்னிந்திய சினிமாவில் தான் சந்தித்த வாய்ப்புக்கான வலை குறித்து பாலிவுட் நடிகை ஃபாத்திமா சனா ஷேக் கூறியுள்ளார்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என இந்திய சினிமாக்களில் எங்கும் வாயப்புக்கான வலை (casting couch) என்பது நீக்கமற நிறைந்திருக்கும் விஷயமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் தனக்கு ஏற்பட்டிருக்கும் வாய்ப்புக்கான வலை குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஃபாத்திமாக சனா ஷேக். இவர் அமீர்கான் நடிப்பில் பான் இந்தியா படமாக ரிலீஸாக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய தங்கல் படத்தில் அமீர்கான் மூத்த மகளாக கீதா போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
பாலிவுட் பப்பிளில் என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் நடிக்க வந்த தொடக்க காலகட்டத்தில் தான் சந்தித்த சவால்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது வாய்ப்புக்கான வலையில் சிக்கிய சம்பவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
எல்லா விஷயத்துக்கும் நீங்கள் ஓகே தான
இதுகுறித்து நடிகை ஃபாத்திமா சனா ஷேக் கூறும்போது, "நீங்கள் எல்லா விஷயத்துக்கும் ஓகே தான? என கேட்டார். நான் அவரிடம் கடுமையான உழைப்பு வெளிப்படுத்துவேன். இந்த கதாபாத்திரத்துக்கு தேவையான விஷயங்களை செய்ய தயார் என்றேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் சொன்னதேயே திரும்ப சொன்னார். அவர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக முடியும் என்பதை பார்க்க ஊமை போல் செயல்பட்டேன்" என்றார்.
இதேபோல் மற்றொரு சம்பவம் ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம், " நீங்கள் பலரை சந்திக்க வேண்டும்" என வெளிப்படையாகவே சென்னார். இதுபோன்ற நபர்கள் வெளிப்படையாக எதையும் சொல்ல மாட்டார்கள். ஆனால் விசித்திரமான வழிகளில் அவற்றை மறைமுகமாகக் குறிப்பிடுவார்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக இருக்கும். அதாவது நீங்கள் இதை செய்ய வேண்டும் என்பது தான்
மனவேதனை அளிக்கும்
திரையுலகை சேர்ந்த அனைவரும் இப்படித்தான் என சொல்ல முடியாது. தனிப்பட்ட சில நபர்களின் தவிர்க்க முடியாத அனுபவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது. சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனுபவித்த துயரங்களைப் பற்றிய கதைகளைக் கேட்பது மனவேதனை அளிக்கும். இந்த சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகவும், பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கூட இதுபோன்ற மோசமான சம்பவங்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
ஃபாத்திமா சனா ஷேக் படங்கள்
குழந்தை நட்சத்திரமாக 1997இல் வெளியான இஸ்க், சாச்சி 420 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஃபாத்திமா சனா ஷேக். 2008இல் வெளியான தஹான் என்ற பாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2016இல் வெளியான தங்கல் படம் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், லூடோ, தார் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மெட்ரோ இன் தினோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஓடிடி சீரிஸ்கள், மியூசிக் விடியோக்களிலும் தலைகாட்டியுள்ளார்.
ஃபாத்திமா சனா ஷேக் இதுவரை ஒரேயொரு தெலுங்கு படத்தில் மட்டும் நடித்துள்ளார். 2015இவ் வெளியான நூவு நேனு ஒக்கட உண்டாம் என்ற படத்தில் நடித்தார். ரெமாண்டிக் ஆக்ஷன் பாணியில் உருவாகியிருந்த இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த படத்துக்கு பின்னர் தற்போது வரை இவர் எந்த தென்னிந்திய படத்திலும் நடிக்கவில்லை.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்