கந்தலாய் கிழிந்த நட்பு.. முள்ளில் சொட்டிய ரத்தம்.. அடித்து விட்டு கட்டிப்பிடித்த ராம்சரண்! - மேக்கிங் வீடியோ இங்கே!
ஆர். ஆர். ஆர் படத்தின் எமோஷனலான காட்சியின் மேக்கிங் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது என்ன வீடியோ? விபரம் என்ன பார்க்கலாம்
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும், பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்தனர்.
இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.
எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இந்தப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இது தவிர்த்து பல்வேறு மேடைகளிலும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு வேவ்வேறு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன.
இந்த நிலையில் இன்றைய தினம் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தின் காட்சி ஒன்றில், உயர்பதவியை அடைவதற்காக ராம்சரண், ஜூனியர் என். டி.ஆர் தனது நண்பர் எனும் போதும், அவரை பிடித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைப்பார்.
அத்தோடு நடு ரோட்டில் ஜூனியர் என்.டி.ஆரை, அவர் முட்கள் நிறைந்த சாட்டைக்கொண்டு அடிக்கும் காட்சியும் இடம் பெற்று இருக்கும். மிகவும் எமோஷனலாக அமைந்த அந்தக்காட்சியின் மேக்கிங் வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், ராம்சரண் ஜூனியர் என். டி.ஆரை ஓங்கி அடித்த அடுத்த கணத்திலேயே அவரை கட்டிப்பிடித்து, இப்படி செய்ததிற்காக மன்னிப்பு கோரும் வகையில் நடந்து கொள்கிறார். உடனே அருகில் இருந்து ராஜமெளலி மற்றும் படக்குழுவினர் இருவரையும் ஆசுவாசப்படுத்துகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்தான நெட்டிசன்களின் கருத்துக்களை பார்க்கலாம்.
ஜூனியர் என் டி ஆர் தற்போது கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீலுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ராம்ஷரனுக்கு அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
கேம் சேஞ்சர்
இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "போக்கிரி மற்றும் ஒக்கடு போன்ற மாஸ் மசாலா பொழுதுபோக்கு படங்களை எடுக்க விரும்பினேன். ஆனால் அதிலும் என் முத்திரை இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அத்தகைய படம் தான் கேம் சேஞ்சர். தெலுங்கில் சிரஞ்சீவி. மகேஷ்பாபு, பிரபாஸை வைத்து படம் பண்ண முயற்சித்தேன். அது கைகூடவில்லை.
ராம் சரணுடன் ஒரு படம் பண்ண விரும்புகிறேன் என்று பலரும் கூறினார்கள். அதனால்தான் இந்த கேம் சேஞ்சர் படம் உருவானது. ஒரு அரசு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் மோதலையும் போரையும் மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ராம் சரண் கல்லூரி மாணவராக நடிக்கும் தோற்றத்தில் நிறைய ஃபயரான காட்சிகள் உள்ளது" என்றார்.
ராம் சரண் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
டாபிக்ஸ்