Actress Samantha: மீண்டும் ஒன்றாக அடிபடும் சமந்தா- சைதன்யா பெயர்.. பஞ்சாயத்து முடியாது போலயே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Samantha: மீண்டும் ஒன்றாக அடிபடும் சமந்தா- சைதன்யா பெயர்.. பஞ்சாயத்து முடியாது போலயே!

Actress Samantha: மீண்டும் ஒன்றாக அடிபடும் சமந்தா- சைதன்யா பெயர்.. பஞ்சாயத்து முடியாது போலயே!

Malavica Natarajan HT Tamil
Published Mar 17, 2025 08:41 AM IST

Actress Samantha: நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தால், தற்போது மீண்டும் சமந்தா நாக சைதன்யா ஆகிய இருவரின் பெயர்கள் மீண்டும் ஒன்றாக அடிபடத் தொடங்கியுள்ளது.

Actress Samantha: மீண்டும் ஒன்றாக அடிபடும் சமந்தா- சைதன்யா பெயர்.. பஞ்சாயத்து முடியாது போலயே!
Actress Samantha: மீண்டும் ஒன்றாக அடிபடும் சமந்தா- சைதன்யா பெயர்.. பஞ்சாயத்து முடியாது போலயே!

சமந்தாவின் செயலால் மகிழ்ச்சி

அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் ஒன்றில், சமந்தா தன் கையில் வரைந்திருந்த டாட்டூவை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை பார்த்த பின் தான் இவர்கள் குறித்த பேச்சே மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் அவருடைய செயலுக்காக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கவனம் ஈர்த்த டாட்டூ

ஞாயிற்றுக்கிழமை, ஒரு ரெடிட் பயனர் சமந்தாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களில் இருந்து ஒன்றை பகிர்ந்தார். அதில் அவர் ஒரு காக்டெய்ல் குடித்துக்கொண்டே கேமராவுக்கு போஸ் கொடுக்கும் சமந்தாவின் கைகளில் உள்ள டாட்டூவை பற்றி பேசி கவனத்தை ஈர்த்தார்.

சமந்தா சைதன்யா டாட்டூ
சமந்தா சைதன்யா டாட்டூ

அந்தப் பதிவில், “சமந்தா இறுதியாக தனது டாட்டூவை அகற்றுகிறார் போலிருக்கிறது. இது நாக சைதன்யா உடன் சமந்தா ஒரே மாதிரியாக போட்டுக் கொண்ட டாட்டூ. அதன் அர்த்தம் ‘உங்கள் சொந்த யதார்த்தத்தை உருவாக்குங்கள்’ என்பது தான். இப்போது, நாக சைதன்யாவின் நினைவாக போடப்பட்ட டாட்டூவை சமந்தா அகற்ற முயற்சி செய்வதால் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், சிலர் இந்த செயல் சமந்தாவிற்கு “நல்லதுதான்” என்றும் கூறினர்.

டாட்டூ செய்யாதீர்கள்

ஒரு ரெடிட் பயனர், “அவர் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்று எழுதினார். மற்றொருவர், “இறுதியாக! அவருக்கு நல்லது, முன்னேற வேண்டிய நேரம் இது” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “இறுதியாக!! இருவரும் இப்போது அமைதியாக இருக்கலாம்” என்று எழுதினார். மற்றொரு கருத்து, “நல்லதுதான். உங்கள் துணையின் பெயரை ஒருபோதும் டாட்டூ செய்யாதீர்கள்” என்று கூறியது.

சமந்தாவின் புகைப்படங்கள்

தனது புகைப்படங்களில், அவர் தனது பாட்காஸ்ட்டிற்காக தயாராகும் காட்சியையும், தனது தோள்களை காட்டியும் பகிர்ந்துள்ளார். அவர் ஒரு தயாரிப்பாளரின் தொப்பியை அணிந்த புகைப்படத்தையும், தனது குழுவினருடன் மகிழ்ச்சியான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதைத் தவிர, மருத்துவமனை படுக்கையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தையும் சமந்தா பகிர்ந்துள்ளார்.

டாட்டூ குறித்து சமந்தா

சமந்தா ஒரு காலத்தில் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரே மாதிரியான டாட்டூவை வரைந்த பின் இதுகுறித்து பேசி இருந்தார். அப்போது அந்த டாட்டூவின் அர்த்தத்தை பகிர்ந்து கொண்டார். அவர், “எனது டாட்டூவின் அர்த்தம் ‘உங்கள் சொந்த யதார்த்தத்தை உருவாக்குங்கள்’ என்பது. சைதன்யாவும் நானும் இதை ஒன்றாக செய்தோம். இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது” என்று கூறினார். இதைத் தவிர, அவர்கள் ஒன்றாக இருந்தபோது, அவர் தனது விலா எலும்பின் வலது பக்கத்தில் ‘சாய்’ என்று டாட்டூவை வரைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்க்கை

சமந்தாவும் நாக சைதன்யாவும் நீண்ட காலம் டேட்டிங் செய்த பிறகு 2017 ஆம் ஆண்டில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் மனம் உவந்து பிரிந்தனர், இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் விவாகரத்திற்கான காரணத்தை இப்போது வரை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாக சைதன்யா நடிகை சோபிதா துவிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமந்தாவின் படங்கள்

சமந்தா கடைசியாக சிட்டாடெல்: ஹன்னி பன்னி படத்தில் நடித்தார், அதில் வருண் தவானுக்கு ஜோடியாக அவர் நடித்தார். அவர் அடுத்து ராஜ் & டி.கே-யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெப் தொடரான தி ஃபேமிலி மேன் சீசன் 3 இல் நடிக்க உள்ளார். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த தொடர் படப்பிடிப்பை முடித்துள்ளது. இது இந்த ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.