பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் உசேன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தீவிர உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறுதிப்படுத்திய நண்பர்
உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற தபேலா இசைக்க கலைஞரான ஜாகீர் உசேன் பல்வேறு உடல்நலப் பிரச்சனை காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.டி.ஐ வெளியிட்ட அறிக்கையின்படி, 73 வயதான ஜாகிர் உசேன் இதயம் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்த பின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. இந்தத் தகவல் அவரது நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சவுராசியாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வேறு தகவல்கள் இல்லை
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஜாகீர் உசேன், கடந்த ஒரு வாரமாக இதயம் தொடர்பான பிரச்சனைக்காக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் ஜாகீரின் நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்" என்று சவுராசியா பி.டி.ஐ.யிடம் கூறி உள்ளார். மேலும், , அவரது குடும்பத்தினர் அவர் விரைவாக குணமடைய அனைவரிடமிருந்தும் பிரார்த்தனைகளையும் ஆசீர்வாதங்களையும் எதிர்பார்க்கின்றனர் என்றார். ஆனால், ஜாகீர் உசேனின் உடல்நிலை குறித்து வேறு எந்த தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
பிரபல தபேலா கலைஞர்
ஜாகிர் ஹுசைன் இந்தியாவின் மிகவும் பிரபலமான தபேலா கலைஞர் ஆவார். இவர் பத்ம பூசண் மற்றும் பத்மஸ்ரீ மற்றும் சங்கீத நாடக அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளார். கூடுதலாக, அவர் ஒரு இசையமைப்பாளர், தாள வாத்தியக் கலைஞர், இசை தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.
மார்ச் 9, 1951 அன்று மும்பையின் மாஹிமில் தபேலா கலைஞர் அல்லா ராக்கா மற்றும் பாவி பேகம் ஆகியோருக்கு பிறந்த ஜாகிர் உசேன் மிக இளம் வயதிலேயே தபேலா வாசிக்க ஆர்வம் கொண்டிருந்தார்.
3 வயதில் தொடங்கிய கலை பயணம்
இவர் தனது 3 வயதில் தனது தந்தையிடமிருந்து பாரம்பரிய மிருதங்கம் தாள இசைக்கருவி வாசிக்க கற்றுக்கொண்டார். மேலும் 12 வயதில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். புகழ்பெற்ற பாப் இசைக்குழுவான தி பீட்டில்ஸுடன் மற்றும் பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு இசைக் கச்சேரிகளை அரங்கேற்றம் செய்துள்ளார்.
விருதுகளுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர்
2024 ஆம் ஆண்டில், 66வது கிராமி விருதுகளில் தபேலா இசைத்து ஜாகீர் உசேன் வரலாறு படைத்தார். ஒரே இரவில் மூன்று வெற்றிக் கோப்பைகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இவரது பெருமையை போற்றும் வகையி, இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் படத்தில் இடம்பெற்ற டெலிபோன் மணிபோல் சிரித்தவள் இவளா எனும் பாடலில், பாடலாசிரியர், கதாநாயகியை ஜாகீர் உசேன் தபேலா இவள் தானா என வர்ணித்து எழுதி இருப்பார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்