Anuradha Sriram: 'இது தான் என்னோட லவ் ஸ்டோரி.. என் ராமர் கிடைச்சது இப்படி தான்'- காதல் கதை சொல்லும் அனுராதா ஸ்ரீராம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anuradha Sriram: 'இது தான் என்னோட லவ் ஸ்டோரி.. என் ராமர் கிடைச்சது இப்படி தான்'- காதல் கதை சொல்லும் அனுராதா ஸ்ரீராம்

Anuradha Sriram: 'இது தான் என்னோட லவ் ஸ்டோரி.. என் ராமர் கிடைச்சது இப்படி தான்'- காதல் கதை சொல்லும் அனுராதா ஸ்ரீராம்

Malavica Natarajan HT Tamil
Feb 01, 2025 10:37 AM IST

Anuradha Sriram: பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் தன் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி சில நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்ட கருத்துகளை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Anuradha Sriram: 'இது தான் என்னோட லவ் ஸ்டோரி.. என் ராமர் கிடைச்சது இப்படி தான்'- காதல் கதை சொல்லும் அனுராதா ஸ்ரீராம்
Anuradha Sriram: 'இது தான் என்னோட லவ் ஸ்டோரி.. என் ராமர் கிடைச்சது இப்படி தான்'- காதல் கதை சொல்லும் அனுராதா ஸ்ரீராம்

'என் அம்மாவோச ஜீன்'

என் அம்மா தான் ஜேசுதாஸுக்கு தமிழ் கத்துக் கொடுத்தாங்க. எங்க அம்மா ட்ரூப்ல தான் ஆன்மீக பாடல் பாடும் வீரமணி எல்லாம் பாடுனாங்க. இளையராஜா சார் கூட எங்க அம்மாக்கு மியூசிக் போட்டுருக்காரு.

நான் பொறந்தப்போ எங்க அம்மா அதிகமா பாடல. எங்க அம்மாவோட ஜீன்னு நெனக்குறேன். நான் இப்படி பாடுறது. எங்க அம்மா சொல்லுவாங்க நான் பேசுறதுக்கு முன்னாடியே பாடுனேன்னு. எங்க அம்மாவுக்கு நான் பாடிட்டே இருக்கனும்ன்னு ஆசை என அனுராதா ஸ்ரீராம் கூறினார்.

'ரஜினி சாரோட நடிச்சது ஆக்சிடென்ட்'-

நான் ரஜினி சாரோட காளி படத்துல நடச்சத பத்தி கேக்குறீங்க. ஆனா நான் சிங்கர்ன்னே இங்க பாதி பேருக்கு தெரியல. எல்லாரும் அந்த டிவியில வந்த ஜட்ஜ் தான நீங்கன்னு கேக்குறாங்க. இதுல நான் நடிச்சது எங்கங்க தெரிய போகுது.

ரஜினி சாரோட நடிச்சது எல்லாம் ஆக்சிடன்ட் தான். நாங்க குடும்பத்தோட ஊட்டி போனபோது, ரஜினி சாரோட காளி படம் ஷூட்டிங் நடந்துட்டு இருந்தது. அப்போ படத்துல நடிக்க வேண்டிய பொன்னு வரல. அந்த சமயம் டூர் போன எங்கள பாத்த டைரக்டர் எங்க அப்பா கிட்ட பெர்மீஷன் எல்லாம் கேட்டாரு. அதுக்கு அப்புறம் தான் அந்த படத்துல நான் நடிச்சேன். அந்தப் படத்த பாத்ததுக்கு அப்புறம் எனக்கு நிறைய ஆஃபர் வந்தது. தெலுங்கு, ஹிந்தின்னு ஒரு 4, 5 படம் பண்ணுனேன். அதெல்லாம் எங்க அப்பாவோட டிசிஷன்.

'இங்க தான் என் கணவர பாத்தேன்'

நான் யூஎஸ் யுனிவர்சிட்டல மியூசிக் படிக்க போகும் போது தான் என்னோட கணவர பாத்தேன். நாங்க இந்தியாவுல இருக்கும் போது ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்ததே இல்ல. யூஎஸ் யுனிவர்சிட்டில நான் மாஸ்டர்ஸ் பண்றதுக்காக போறேன்.இப்போ தான் மெயில், போன் எல்லாம். நான் படிக்க போகும் போது வெரும் லெட்டர் தான்.

அப்போ, யுனிவர்சிட்டி சார்பா எனக்கு ரூம் பாக்க, பேங்க் அக்கவுண்ட் எல்லாம் கிரியேட் பண்ண தேவையான உதவி எல்லாம் செய்ய இவர அசைன் பண்றாங்க. இது சம்பந்தமா எனக்கு இவரு போட்ட லெட்டர் எங்க அப்பாக்கு ராமநவமி அன்னைக்கு கிடைக்குது. அப்போ, எங்க அப்பா ராமரே லெட்டர் போட்ருக்காருன்னு சொல்லிட்டு இருந்தாரு. அதுனால எனக்கு அங்க இருந்தே கனெக்ஷன் வந்திருக்கலாம்.

'அவரோட குடும்பத்த பிடிச்சது'

அமெரிக்காவுல எப்படின்னா இந்தியாவுல இருந்து யாரோட அம்மா அப்பா வந்தாலும் எல்லாரும் அவங்க வீட்டுக்கு போயிடுவோம். நல்ல சாப்பாடு கிடைக்கும்ன்னு. அங்க போனா குடும்பமே உக்காந்து கச்சேரி பண்ணிட்டு இருக்காங்க. குடும்பத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மியூசிக்ல எக்ஸ்பெர்ட்டா இருக்காங்க. அந்த டைம்ல அவங்க எல்லாரையும் பாத்தப்போ, எனக்கு இவர பிடிச்சதோ இல்லையோ இவரோட குடும்பத்த பிடிச்சது. ஏன்னா எனக்கு சின்ன வயசுல இருந்து மியூசிக்ன்னா ரொம்ப பிடிக்கும், இந்த துறையில மேல வர ரொம்ப சப்போர்ட் தேவை.

'டைம் வேஸ்ட் பண்ண பிடிக்காது'

குடும்பமே பாட்டு பத்தி தான் பேசுவாங்க. பாட்டுன்னா பைத்தியமா இருப்பாங்க. இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அவங்கள பாத்து தான் எனக்கு இவர பிடிச்சு போச்சுன்னு நெனக்குறேன். அதுக்கப்புறம், நாங்க அங்க ஒரு குரூப்ல படிச்சோம். 3வது மாசத்துல நாங்க 2 பேரும் சேர்ந்து மாராட்டிய மேடை கச்சேரி ஒன்னு பண்ணோம். அப்போவே அவர பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன். எனக்கு டைம் வேஸ்ட் பண்ண பிடிக்காது.

நான் இதப்பத்தி என் அப்பாட்ட பேசினபோது, அவர் கிளம்பி அமெரிக்கா வந்துட்டாரு. நான் யார லவ் பண்றேன்னு பாக்க. அதுகப்புறம் நாங்க அமெரிக்காவுல இருந்த டைம்லயே, எங்க அம்மா அப்பா, என் கணவரோட குடும்பம் எல்லாம் பேசி நிச்சயதார்த்தம் பண்ணிட்டாங்க.

'என்னோட வரப்பிரசாதம்'

என் மாமனார் மாமியார் எனக்கு பெரிய வரப் பிரசாதம். ரஹ்மான் சாரோட ரெக்கார்ட்டிங் எல்லாம் போனா, எப்போ விடியுது, எப்போ நைட் ஆகுதுன்னே தெரியாது. அப்படி தான் இருக்கும். அந்த சமயத்துல என்னோட மாமனார் மாமியார் இங்க வந்து தங்கி இருந்தாங்க. நம்ம அப்பா அம்மா எல்லாம் மாமனார் மாமியார்க்கு 4 மணிக்கு எழுந்து சமைக்கனும்ன்னு சொல்லி கொடுத்திருப்பாங்க. நான் ரெக்கார்டிங் முடிச்சிட்டு வந்து ஒருநாள் ரெஸ்ட் கூட எடுக்காம சமைச்ச அப்போ, என் மாமனார் வந்து, என்ன ரெஸ்ட் எடுக்க சொன்னாரு. நீ பாடிட்டு வந்துருக்க. உனக்கு ரெஸ்ட் தேவை. சமைக்குறது எல்லாம் என் மனைவி பாத்துப்பான்னு சொன்னாரு. இந்த வார்த்தை எல்லாம் யார் சொல்லுவாங்க. என் கனவரும் சரி, அவரு கூட பொறந்தவங்களும் சரி, இந்த விஷயத்துல எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க" என தன் குடும்பத்தை பற்றி பூரிப்புடன் பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.