Fahad Fazil: வழுக்கை தலைதான் ஆனாலும் காதல்! - ஒரே வார்த்தையில் ஃபகத் இதயத்தை பறித்த நஸ்ரியா - எப்படி சாத்தியமானது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fahad Fazil: வழுக்கை தலைதான் ஆனாலும் காதல்! - ஒரே வார்த்தையில் ஃபகத் இதயத்தை பறித்த நஸ்ரியா - எப்படி சாத்தியமானது?

Fahad Fazil: வழுக்கை தலைதான் ஆனாலும் காதல்! - ஒரே வார்த்தையில் ஃபகத் இதயத்தை பறித்த நஸ்ரியா - எப்படி சாத்தியமானது?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 26, 2023 06:30 AM IST

ஃபகத் ஃபாசில் காதல் பற்றிய பிரபல பத்திரிகையாளர் சொன்ன விஷயங்கள் இ

fahad fazil untold love story and nazriya cheyyar balu latest interview
fahad fazil untold love story and nazriya cheyyar balu latest interview

அப்போது பலரும் இவ்வளவு அழகாக இருக்கும் நீங்கள் ஏன் அவரை கல்யாணம் செய்கிறாய் என்ற நஸ்ரியாவிடம் கேட்டார்கள்.. சமூகவலைதளங்களிலும் ஃபகத் ஃபாசில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த இருவர்களுக்கு இடையேயான காதல் பற்றிய சுவாரசிய தகவல்களை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்து இருக்கிறார்.

ஃபகத் ஃபாசில் நஸ்ரியா!
ஃபகத் ஃபாசில் நஸ்ரியா!

அவர் பேசும் போது, “ ஃபகத் ஃபாசிலின் அப்பா மலையாளத்தில் மிகப்பெரிய டைரக்டர்; தமிழிலும் படங்கள் எடுத்திருக்கிறார். ஃபகத் ஃபாசில் தன்னுடைய தந்தையின் பெயரை எங்குமே பயன்படுத்தவில்லை.

சிறு வயதிலிருந்தே ஃபகத் பாசிலுக்கு இசையின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை எங்கு கேட்டாலும் அவர் அப்படியே அங்கு நின்று விடுவாராம். நஸ்ரியாவும் ஃபகத் ஃபாசிலும் கல்யாணம் செய்த போது எல்லோருக்கும் அது அதிர்ச்சிதான். பெங்களூர் டேஸ் படத்தின் போது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் இருவரும் அவரவர் மனதிற்குள் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் நஸ்ரியாதான் சென்று ஃபகத் ஃபாசிலிடம் சென்று தன்னுடைய காதலை சொல்லி இருக்கிறார். அப்படி இந்தக்காதலை சொல்லும் பொழுது நஸ்ரியா சொன்ன ஒரு விஷயத்தை ஃபகத் ஃபாசில் இன்று வரை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டே இருக்கிறாராம்.

அது என்ன விஷயம் என்னவென்றால் நான் உங்களை ஒரு குழந்தை போல் கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது. ஏற்கனவே அன்பு தேவைப்படும் இடத்தில் இருந்த ஃபகத் ஃபாசிலுக்கு இதைக் கேட்டவுடன் நெகழ்ச்சி ஏற்பட்டு விட்டது; உடனே இரண்டு வீட்டாரிடமும் சொல்லி திருமண ஏற்பாடுகள் நடந்தன” என்றார்

நன்றி: ஆகாயம் தமிழ்!