Fact Check: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் போட்டோ!-fact check edited photo circulating as jyothika took a scantily clad selfie with akshay kumar - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fact Check: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் போட்டோ!

Fact Check: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் போட்டோ!

News checker HT Tamil
Aug 18, 2024 10:44 AM IST

Akshay Kumar: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஜோதிகா என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Fact Check: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் போட்டோ!
Fact Check: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் போட்டோ!

உண்மை: இப்புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டு பரவி வருகிறது.

அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஜோதிகா என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“அப்போ நாலடியார் வாழ்க்கை” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

சமூக வலைத்தலத்தில் பரப்பப்படும் புகைப்படம்

அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஜோதிகா என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் நியூஸ்செக்கர் தமிழ் இறங்கியது.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த புகைப்படம் குறித்து ”PHOTO: Jyotika pens heartfelt note for Akshay Kumar, recalls having his poster in her room” என்று PinkVilla வெளியிட்டிருந்த கட்டுரை கிடைத்தது. அதில், அக்‌ஷய் குமாருடன் ஜோதிகா எடுத்துக்கொண்ட புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

ஜோதிகா அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் ”உங்களுடைய ஃபேன் கேர்ள்-ஆக பெட்ரூமில் புகைப்படம் ஒட்டி வைத்ததில் இருந்து தற்போது உங்கள் 150வது படத்தின் தயாரிப்பாளராகிய என் வாழ்வின் அருமையான தருணம்” என்பதாக பதிவிட்டிருந்தார். அதில், அக்‌ஷய் குமாருடன் இணைந்து புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து ஜோதிகா குறைந்த உடை அணிந்துள்ளதாக பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படத்திலேயே அப்புகைப்படம் MintAI மூலமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாக வாட்டர்மார்க்கும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஜோதிகா என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொறுப்புத்துறப்பு

இந்தச் செய்தி முதலில் newschecker-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

யார் இந்த அக்ஷய் குமார்?

அக்ஷய் ஹரி ஓம் பாட்டியா, தொழில்ரீதியாக அக்ஷய் குமார் என அழைக்கப்படுகிறார், இந்தி சினிமாவில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ஊடகங்களில் “கிலாடி குமார்” என குறிப்பிடப்படுகிறார், 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது வாழ்க்கையில், அக்ஷய் குமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மற்றும் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் இரண்டு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். 2009 இல் இந்திய அரசாங்கத்திடமிருந்து இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். அக்ஷய் குமார் இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவர். ஃபோர்ப்ஸ் 2015 முதல் 2020 வரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்களில் அக்ஷ்ய் குமாரை சேர்த்துள்ளது. 2019 மற்றும் 2020 க்கு இடையில், இரண்டு பட்டியல்களிலும் அவர் மட்டுமே இந்தியராக இருந்தார்.

அக்ஷய் குமார் தனது வாழ்க்கையை 1991 இல் சவுகந்துடன் தொடங்கினார் மற்றும் ஒரு வருடம் கழித்து கிலாடி என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.