தான் உனக்கு நண்பன் கிடையாது என்று கயலிடம் சொன்ன சரவணவேலு.. ஷாக் ஆன எழில்.. கயல் சீரியல் இன்றைய அப்டேட்
தான் உனக்கு நண்பன் கிடையாது என்று கயலிடம் சொன்ன சரவணவேலு.. ஷாக் ஆன எழில்.. கயல் சீரியல் இன்றைய அப்டேட்

சன் டிவியில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல். அந்த சீரியலில் என்ன நடக்கிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்:
கயல் சீரியலில் கதையின் நாயகியான ‘கயல்’, தனது சொந்த ஊருக்கு திருமணத்துக்குப் பின் வந்திருக்கிறார். உடன், கயலின் கணவர் எழில் இருக்கிறார். அப்போது, கயலை சிறு வயதில் காதலித்த சரவண வேலு அங்கிருக்கும் கோயிலில் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது ஊரை விட்டுச்சென்ற கயலை பார்க்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். அந்த தருணம் பார்த்து, கயல் தனது பூர்வீக ஊருக்கு வருகிறார். கயல் வருகை தந்ததை அறிந்து, கயலின் தந்தையிடம் கடன் கொடுத்தவர்கள் வந்து பணம் கேட்கிறார்கள்.
அப்போது கயல் தனது தந்தை வாங்கிய கடனை ஒரு வருடத்துக்குள் கட்டிவிடுவதாக உறுதியளிக்கிறார். அப்போது சரவண வேலு, தன் சிறுவயது காதலி கயலுக்கு ஆதரவாக ஊர் மக்களை எதிர்த்துப்பேசுகிறார். இந்நிலையில், கயலிடம் ஒரு கோயிலில் வைத்து பேசும் சரவண வேலு, ‘ உனக்கு ஒன்னு என்றால் தன்னால் தாங்கிக்கொள்ளமுடியாது என்று அன்னிக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்’ எனச் சொல்கிறார். இதைப் பார்த்து கயலிலின் கணவர் எழில் ஷாக் ஆகிறார்.