HBD Simran : எவர்கிரீன் பேவரைட் நடிகை.. ருக்கு-வை மறக்க முடியுமா? 2000-ல் அதிக சம்பளம்.. சிம்ரன் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Simran : எவர்கிரீன் பேவரைட் நடிகை.. ருக்கு-வை மறக்க முடியுமா? 2000-ல் அதிக சம்பளம்.. சிம்ரன் பிறந்தநாள் இன்று!

HBD Simran : எவர்கிரீன் பேவரைட் நடிகை.. ருக்கு-வை மறக்க முடியுமா? 2000-ல் அதிக சம்பளம்.. சிம்ரன் பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Apr 04, 2024 06:00 AM IST

Actress Simran Birthday : சூப்பர் ஹிட் திரைப்படமான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் ருக்கு- குட்டி கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் பதிந்த கதாபாத்திரம். கண் தெரியாத பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார் சிம்ரன்.

 நடிகை சிம்ரன்.
நடிகை சிம்ரன்.

இதையடுத்து 1996 ஆம் ஆண்டில் தேரே மேரே சப்னே என்ற படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு வெற்றிபடமாக அமைந்தது. அதேபோல இப்படம் தான் இவருக்கு முதல் வெற்றி படம். இந்திரபிரஸ்தம் என்ற மலையாள திரைப்படத்தில் மம்முட்டியுடன் நடித்துள்ளார். அதேபோல சிம்ஹடா என்ற கன்னடா திரைப்படத்தில் சிவராஜ் உடன் நடித்துள்ளார். தெலுங்கில் அப்பாய் காரி பெல்லி என்ற படத்தில் நடித்துள்ளார்.1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இவரது நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். அதேபோல வாலி படத்தில் அஜித்திடம் ஏமாறும் அப்பாவி பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார்.அதேபோல விஜய் நடிப்பில் வெளியான பிரியமானவளே படத்தில் முதல் பாகத்தில் பயப்படும் பெண்ணாகவும் இரண்டாம் பாகத்தில் கண்டிப்பு காட்டும் பெண்ணாகவும் நடித்து நம்மை மிரட்டியிருப்பார்.

பஞ்சதந்திரம் படத்தில் இவர் கணவரை விட்டுக்கொடுக்க கூடாது என ரம்யா கிருஷ்ணன் உடன் இவர் போடும் சண்டை குறிப்பாக வந்தேன் வந்தேன் பாடலில் இவரின் நடிப்பு என அட்டகாசம் செய்து இருப்பார். வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு சூர்யாவுக்கு மனைவியாக, ஒரு சூர்யாவுக்கு தாயாகவும் நடித்து இருப்பார். தமிழில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் வாங்கிய நடிகை சிம்ரன் தான்.

இவர் நடிப்பில் அனைத்து விதமான கதாப்பாத்திரத்தையும் எந்த குறையும் வைக்காமல் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். சிம்ரன் நடிப்பில் மட்டும் கெட்டிகாரர் இல்லை நடனத்திலும் தான். விஜய்க்கு இணையாக ஆடக்கூடிய ஒரு நாயகி என்றால் அது சிம்ரன் தான். அதை நாம் ஆள்தோட்ட பூபதி பாடலில் நாம் பார்த்து இருப்போம். இப்பாடல் சூப்பர் ஹிட் ஆக சிம்ரனும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவரின் நடனம் இருக்கும்.

நடிகர்கள் மட்டுமல்ல டான்ஸ் மாஸ்டர்களுக்கு இணையான நடனம் ஆடுவதில் வித்தகர், தொட்டு, தொட்டு பேசும் சுல்தானா பாடலில் டான்ஸ் மாஸ்டர் ராஜீசுந்தரத்துக்கு இணையாக நடனம் ஆடியிருப்பார். சூப்பர் ஹிட் திரைப்படமான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் ருக்கு- குட்டி கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் பதிந்த கதாபாத்திரம். கண் தெரியாத பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார். திரைத்துறையில் நீண்ட காலம் கதாநாயகியாக பயணம் செய்த சிலருள் குறிப்பிடத்தக்கவர் நடிகை சிம்ரன். பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

தமிழில் இவரின் ஹிட் படங்கள் சில

ஒன்ஸ்மோர்

நேருக்கு நேர்

நட்புக்காக

துள்ளாத மனமும் துள்ளும்

கண்ணெதிரே தோன்றினாள்

அவள் வருவாளா

வாலி

ஜோடி

பிரியமானவளே

உன்னை கொடு என்னைத் தருவேன்

பார்த்தேன் ரசித்தேன்

பஞ்சதந்திரம்

ரமணா

கன்னத்தில் முத்தமிட்டால்

வாரணம் ஆயிரம்

சிம்ரன் தனது நண்பன் தீபக் பகா என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பதற்கு கொஞ்சம் ப்ரேக் கொடுத்திருந்த சிம்ரன், மீண்டும் திரைக்கு வர தொடங்கி இருக்கிறார். இவர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் வெளியான சீமாராஜா படத்தில் வில்லியாக நடித்திருப்பார். எவர்கிரீன் பேவரைட் நடிகை சிம்ரனுக்கு இன்று பிறந்தநாள். ஹெச்டி தமிழ் சார்பாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.