HBD Mammootty: என்றும் அழகன்.. மெகா நடிகர் மம்முட்டி.. பெயர் வந்த கதை!
இன்று மம்முட்டி தனது 72 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்களுடன் இணைந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மம்முக்கா

மெகா ஸ்டார், மம்முகா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மம்முட்டி குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இந்திய சினிமா உலகில் மகா நடிகன் என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் மம்முட்டி. அந்த மகா கலைஞரை மொழி அடையாளங்களுக்கு அடைத்து விட முடியாது.
பிறப்பு
மம்முட்டி 1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்பு என்ற இடத்தில் இஸ்மாயில்-பாத்திமா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் முகமது குட்டி
கல்வி
இவர் 1960ம் ஆண்டு பிறகு அவருடைய குடும்பம் எர்ணாகுளம் அரசுப்பள்ளியில் முடித்தார். கொச்சியிலுள்ள மகராஜாஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார். அவர் மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.
திரைத்துறை
1971 ஆம் ஆண்டு கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய அனுபவங்கள் பாலிச்சகள் படத்தில் அறிமுகமானார். பின் காலசக்கரம் போன்ற படங்களில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அது பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் 1980 ஆம் ஆண்டு எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த “வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள்” திரைப்படம், இவருக்கு ஒரு நல்ல திருப்பமாக இருந்தது. இதையடுத்து மேலா, திருஸ்னா போன்ற படங்கள் அவரை மலையாள திரை உலகில் கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தந்தது. இதையடுத்து. அஹிம்சா, யவனிகா, கூடேவிதே, ஆள் கூட்டத்தில் தனியே, சிபிஐ, டைரி குறிப்பு என ஏராளமான வெற்றிப்படங்களில் நடத்திருந்தார்.
தமிழில் மம்முட்டி
இதேபோல் தமிழில் அழகன், தளபதி, ஆனந்தம், மக்கள் ஆட்சி, மறுமலர்ச்சி, எதிரும்புதிரும், கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன். பேரன்பு போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இப்படி தன் திரை வாழ்வில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என சுமார் 400 படங்களில் நடித்துள்ளார். 3 தேசிய விருதுகள், 7 கேரள மாநில விருதுகள், 13 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் கடந்த 2000ம் ஆம் ஆண்டில் வெளிவந்த டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மம்முட்டி பெயர் வந்த கதை
முகமது குட்டி என்ற பெயரை மம்முட்டி என மாறியதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. பலரும் நினைப்பது போல் திரைப்படத்திற்காக மம்முட்டி தனது பெயரை மாற்றி கொள்ள வில்லை. அவருக்கு மம்முட்டி என்ற பெயரை வைத்தது அவரது நண்பன் தான்.
சிறுவயதில் முகமது குட்டி என்ற பெயர் தனக்கு பிடிக்காததால் அவர் தனது நண்பர்களிடம் ஓமர் என்றும் ஷெரிப் என்றும் கூறிக் கொள்வார். பள்ளியில் வெகு நாட்களாக எல்லோரிடமும் தன்னுடைய பெயரை ஓமர் என்றும் ஷெரிப் என்றுமே பலரிடம் கூறி வந்துள்ளார். அதை அவரது நண்பர்களும் நம்பி இருந்தனர். அப்போது ஒரு நாள் ஓமர் ஷெரிப்பாக எல்லோரும் நினைத்திருந்த முகமது குட்டியின் பள்ளி அடையாள அட்டை தவறி கீழே விழுந்து விட அதை எடுத்த ஒரு மாணவன் அடையாள அட்டையை பார்த்துவிட்டு 'டேய்.. உன்னுடைய பெயர் முகமது குட்டியா..?? இவ்வளவு நாளா.. எங்களை ஏமாற்றி விட்டாயா..!! என்றும் முகமது குட்டியை சுருக்கி மம்முட்டி என்று பட்ட பெயர் வைத்து கோபமாக கத்தியுள்ளான். இதையடுத்து அவரது நண்பர்கள் மம்முட்டி மம்முட்டி என்று கிண்டலாக அழைக்க ஆரம்பித்தனர்.
ஆனால் இன்று மலையாளம், தமிழ் ஏன் இந்திய திரை உலகமே மம்முட்டி என்ற பெயரை உச்சரிக்கும் என்று அந்த நண்பன் நினைத்திருக்க வாய்பில்லைதான்.
இன்று மம்முட்டி தனது 72 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்களுடன் இணைந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் மம்முக்கா
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
