Eeramana Rojave: 33 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஈர்ப்பாகவே இருக்கும் ஈரமான ரோஜாவே
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Eeramana Rojave: 33 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஈர்ப்பாகவே இருக்கும் ஈரமான ரோஜாவே

Eeramana Rojave: 33 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஈர்ப்பாகவே இருக்கும் ஈரமான ரோஜாவே

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 12, 2024 06:00 AM IST

வழக்கமான கதையை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சென்றது இளைய ராஜா இசையில் அதோ மேக ஊர்வலம், வா.. வா.. அன்பே, தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு., வண்ண பூங்காவனம் ஆகிய பாடல்கள் அனைத்தும் அப்போது ஹிட் அடித்த பாடல்கள்.

ஈரமான ரோஜாவே
ஈரமான ரோஜாவே

குறிப்பாக 80-90 களில் கல்லூரியை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்த காலம்... கல்லூரி கதைக்களத்தில் வந்த படம்தான் இது. வழக்கம் போல் ஊடலில் ஆரம்பித்து காதலாவதும் சக கல்லூரி மாணவன் விரோதமாவதும் தந்தை எதிர்ப்பை மீறி காதல் வென்றதா என்ற பார்முலா தான் இந்த படமும்.

படத்தில் சிவா , மோகினி ஆகியோர் நாயகன் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். நாசர் நாயகியின் பணக்கார அப்பா. ஶ்ரீவித்யா தனது பேத்தி நாயகி க்கு சிக்கல் வரும் போதெல்லாம் உதவும் பாட்டி. கல்லூரி வளாகம் முழுவதும் கலகலப்பு க்கு சின்னி ஜெயந்த் தலைமையில் நண்பர்கள் குழு ரசிக்க வைக்கின்றனர். அந்த குழுவில் நாயகனும் ஒருவர். வில்லனாக அதே கல்லூரியில் படிக்கும் விசித்திரமான ஹெல்மெட் என்ற கதாபாத்திரத்தில் ஒரு மாணவர். இவர்களை சுற்றி தான் கதை.

கல்லூரியில் ஏற்படும் நாயகன்-நாயகி காதலுக்கு இடையே வில்லன் குறுக்கீடு ஒரு பக்கம். மறுபுறம் நாயகியின் விருப்பத்தை மதிக்காமல் பணக்கார அப்பா தனது பெண்ணுக்கு வசதியான நண்பர் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார். பாட்டி உதவியோடு காதலர்கள் தப்பி செல்ல அவர்களை தேடி நாசர் ஆட்களும் வில்லன் ஹெல்மெட்டும் கிளம்புவார்கள். இத்தனையும் மீறி காதல் வெற்றி பெற்றதா என்பது கிளைமாக்ஸ். 

வழக்கமான கதையை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சென்றது இளைய ராஜா இசையில் அதோ மேக ஊர்வலம், வா.. வா.. அன்பே, தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு., வண்ண பூங்காவனம் ஆகிய பாடல்கள் அனைத்தும் அப்போது ஹிட் அடித்த பாடல்கள்.

கவித்துவமான தலைப்பும் இளமை ததும்பும் பாடல்களும் ரசிகர்களை ஈர்த்தது. இன்றளவும் இந்த படத்தின் பாடங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதே உண்மை.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.