Ethirneechal Thodargirathu: பார்கவி வீட்டை பந்தாடிய அறிவுக்கரசி.. போலீஸிற்கு போகும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியல்..
Ethirneechal Thodargirathu: தர்ஷன் காதலித்து வந்த பார்கவியின் குடும்பத்தை ஆள் வைத்து அடித்துள்ளார் அறிவுக்கரசி.

Ethirneechal Thodargirathu: தர்ஷன் தன் அப்பா ஆதி குணசேகரனை ஜெயலில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்காக அறிவுக்கரசியின் மகள் அன்புவை கல்யாணம் செய்ய சம்மதம் தெரிவித்தான்.
இதற்காக இத்தனை நாள் தேடித் தேடி போய் காதலித்த பார்கவியை விட்டு விலகினான். அவளது போனையும், அவள் தரப்பு நியாயத்தையும் முற்றிலும் நிராகரித்தான். இதனால், பார்கவி தர்ஷனின் வீட்டிற்கே வந்து நியாயம் கேட்டாள்.
அடியாட்களை அனுப்பிய அறிவுக்கரசி
அதே சமயம், இதுபற்றி எந்த கவலையும் படாமல், தர்ஷன் அறிவுக்கரசி வீட்டிற்கு பெண் பார்க்க சென்றான். அந்த சமயத்தில் பார்கவி போன் செய்தார். இவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் ஈஸ்வரி இதைப்பற்றி கேட்டு பிரச்சனை பெரிதான நிலையில், தர்ஷனை காதலித்த பெண்ணின் வீட்டிற்கு அடியாட்களை அனுப்பினாள் அறிவுக்கரசி.
ஈஸ்வரிக்கும் ஜனனிக்கும் விழுந்த அடி
இது ஏதும் அறியாத ஈஸ்வரியும் ஜனனியும் பார்கவியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று அவளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, குணசேகரன் விஷயத்தில் ஈஸ்வரி எடுத்த முடிவு தர்ஷனை எப்படி பாதித்தது என்றும் பேசி வந்தனர். அதற்குள்ளாக அறிவுக்கரசியின் அடியாட்கள் பார்கவியையும் அவரது அப்பாவையும் மட்டுமின்றி ஜன்னி, ஈஸ்வரியையும் தாக்கினர். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
தர்ஷனை அழைக்கும் பார்கவி
முன்னதாக, பார்கவி தர்ஷன் வீட்டிற்கு வந்த தன்னை வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் அறிமுகப்படுத்தினார். பின் தர்ஷனுக்கு போன் செய்து, நான் உங்க வீட்ல தான் இருக்கேன். உன்ன ஜஸ்ட் ப்ரண்ட்டுண்ணு தான் சொல்லிருக்கேன். நம்மல பத்தி எதுவும் சொல்லல. நீ வீட்டு மட்டும் வா. உன்ன பாத்துட்டு வெளிய வச்சே பேசிட்டு அப்படியே நான் போயிடுறேன்னு சொல்கிறாள்.
ஆத்திரமடையும் தர்ஷன்
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தர்ஷன், உன்னால என் நிம்மதியே போச்சு. யாரக் கேட்டு வீட்டுக்கு வந்த. எதாவது வாயத் தொறந்தா அப்படியே உன்ன வெட்டி போட்டுடுவேன். என்ன நிம்மதியா இருக்கவே விட மாட்ட இல்ல என திட்டி வீட்டிற்கு வருவதாக சம்மதிக்கிறான்.
பயத்தில் ஈஸ்வரி
நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர், தர்ஷன் மேல் ஆத்திரம் பொங்க நிற்கின்றனர். மேலும், இன்னைக்கு காசுக்காக காதலிச்ச பொன்ன ஏமாத்திட்டு போறான்னா, நாளைக்கு அவன் என்ன வேணும்ன்னாலும் செய்வான் என ஈஸ்வரி தர்ஷனின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்து மிகவும் பயந்து போய் இருக்கிறார்.
ஜனனியின் பிளான்
அந்த சமயத்தில், அறிவுக்கரசி ஆதி குணசேகரன் அண்ணன் வெளிய வர்றத திருவிழா மாதிரி கொண்டாடனும் என சொல்லிக் கொண்டிருக்க, இங்கு ஜனனி, கல்யாணம் நடந்தா தான ஆதி குணசேகரன் வெளிய வருவாரு. நாம கல்யாணத்தையே நிறுத்திட்டா என்ன என திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்