Ethirneechal Thodargirathu: தர்ஷனால் தவிக்கும் இளம்பெண்.. திட்டம் போடும் குடும்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்..
Ethirneechal Thodargirathu: தர்ஷனால் காதலித்து ஏமாற்றப்பட்ட பெண், நியாயம் கேட்டு ஆதி குணசேகரனின் வீட்டிற்கு வந்துள்ளார்.

Ethirneechal Thodargirathu: வீட்டில் உள்ள பெண்களை மிகவும் இழிவாக நடத்தியது மட்டுமல்லாமல் பல சட்டவிரோத செயல்களை செய்ததற்காக ஆதி குணசேகரன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் இருந்து ஆதி குணசேகரன் வெளியில் வரவேண்டும் என்றாலோ, பரோலில் வர வேண்டும் என்றாலோ வீட்டில் உள்ள பெண்களின் ஒப்புதல் மிக அவசியமாக இருந்தது. ஆனால், தற்போது, அவர்களின் அனுமதி இல்லாமலே ஆதி குணசேகரனுக்கு பரோல் வழங்கியுள்ளது நீதிமன்றம்.
தர்ஷனால் வரும் புது பிரச்சனை
இதனால், வீட்டில் உள்ள ஆதி குணசேகரனின் மனைவி ஈஸ்வரி மற்றும் அவரது தம்பி மனைவிகளான ரேணுகா, நந்தினி, ஜனனியைத் தவிர அத்தனை பேரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்,
இந்த சமயத்தில் தான் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த வீட்டு பையனால் புதிதாக ஒரு பிரச்சனை வருகிறது. ஆதி குணசேகரனின் மகனானா தர்ஷன், தன்னை காதலித்து வந்ததாகவும், அதோடு காதலித்து கர்ப்பமாக்கியதாகவும் ஒரு இளம்பெண்ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களிடம் கூறினார்.
ஈஸ்வரி செய்த காரியம்
முதலில், இது எதுவும் புரியைத பெண்கள், தர்ஷனின் நண்பர்கள் தான் இதுபோன்ற வேலையை செய்திருப்பார்கள் என நினைத்து அந்தப் பெண்ணிடம் விசாரித்து வந்தனர். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தர்ஷினி, அந்தப் பெண் சொல்வதே தர்ஷனைத் தான் என்றதும் அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அந்தப் பெண் நடந்தவற்றை எல்லாம் விளக்கினாள். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி, தன் மகனிடம் போன் செய்து தான் சொல்வது போல பேசச் சொல்கிறாள். அவளும் போன் செய்து ஸ்பீக்கரில் போடுகிறாள். தர்ஷனை வீட்டிற்கு வருமாறு கூற எதிர்பக்கம் தர்ஷனின் ரியாக்ஷன் என்ன என்பதைப் பார்த்து அனைவரும் கோபத்தில் இருக்கின்றனர்.
திட்டம் தீட்டும் தம்பிகள்
இப்படி ஒரு சம்பவம் வீட்டில் நடப்பதே தெரியாத குண சேகரனின் அம்மா விசாலாட்சி, தம்பிகள் கதிர், ஞானம், கரிகாலன், மர்றும் அறிவுக்கரசி ஆகியோர் ஆதி குணசேகரன் வெளியில் வந்த உடன் செய்ய வேண்டிய வேலை என்பது குறித்து பேசி வருகின்றனர்.
ஆதி குணசேகரணுக்கு பரோல்
முன்னதாக, ரேணுகாவை வேலை செய்யும் இடத்தில் இருந்து இழுத்து வந்தது தொடர்பாக வீட்டில் நடந்த சண்டையில், கதிர் ஜனனியை அடிக்க கை ஓங்கினான். அந்த சமயத்தில் வீட்டிற்குள் வரும் அறிவுக்கரசி, அம்மாச்சி. குணசேகரன் மாமாவுக்கு பரோல் கிடைச்சிருச்சு என்கிறார். அதனை பார்த்து ஜனனி எங்களுடைய அப்ரூவல் இல்லாமல் வரமுடியாதே என்கிறார்.
நான் குணசேகரன் மாமாவை பார்த்து பேசும்போது கேட்டேன். அவங்க ஒரு ஒரு பாயின்ட்டை சொல்லி என்ன ஆஃப் செய்திட்டாங்க என சொல்லி கண்சிமிட்டுகிறார். அதன்பின், ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா, ஜனனி ஆகியோர் புலம்புகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்