தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal Serial Today Promo: போட்டு கொடுத்த ஜான்சி ராணி.. கழுத்தை பிடித்து நெறித்த தர்ஷினி!

Ethirneechal Serial Today Promo: போட்டு கொடுத்த ஜான்சி ராணி.. கழுத்தை பிடித்து நெறித்த தர்ஷினி!

Aarthi Balaji HT Tamil
May 29, 2024 11:21 AM IST

Ethirneechal Serial Today Promo: ஞானம், கரிகாலனிடம் பணத்தை கொடுத்து புதிய தொழில் செய்வதாக சென்று ஏமாந்து இருக்கிறார். கதிரும் தனக்கு வரவேண்டிய காது குத்து மொய் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்து உள்ளார்.

போட்டு கொடுத்த ஜான்சி ராணி.. கழுத்தை பிடித்து நெறித்த தர்ஷினி!
போட்டு கொடுத்த ஜான்சி ராணி.. கழுத்தை பிடித்து நெறித்த தர்ஷினி!

ட்ரெண்டிங் செய்திகள்

பகல் சீரியல்களை விட இரவு சீரியல்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

குணசேகரன் இறப்பு

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.

எதிர்நீச்சல் 

தர்ஷினி கடத்தல் விஷயம் நடந்து முடிந்த பிறகு நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் எதிர்நீச்சல் சீரியல் சென்று கொண்டு இருந்தது.

தற்போது அண்ணை எதிர்த்து தம்பிகள் நிற்பதால் சற்று சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கிறார்கள்.

ஞானம், கரிகாலனிடம் பணத்தை கொடுத்து புதிய தொழில் செய்வதாக சென்று ஏமாந்து இருக்கிறார். கதிரும் தனக்கு வரவேண்டிய காது குத்து மொய் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்து உள்ளார். 

எதிர்நீச்சல் சீரியல் இன்று

வழக்கம் போல் அண்ணா, அண்ணா என அழைத்து கொண்டு ஜான்சி ராணி ஓவராக ஆட்டம் போட்டு கொண்டே குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். 

தங்கை ஆதிரைக்கு மீண்டும் திருமண ஏற்பாடு நடைபெற உள்ளதை ஜான்சி ராணி, குணசேகரனிடம் போட்டு கொடுத்து உள்ளார். அருண் வெளிநாட்டில் இருந்து வந்து இருப்பதையும் சொன்னார். மறுபக்கம் தர்ஷினி தன்னை கடத்தியது குணசேகரன் என்பதை உடைத்துவிட்டார்.

கழுத்தை பிடித்து நெறித்த தர்ஷினி

தாரா, ஜான்சி ராணியிடம் சென்று நீ பணம் வாங்க வந்தால் வங்கிட்டு போ என சொல்ல தாராவை அடிக்க செல்கிறார். அவரது கழுத்தை பிடித்து நெறித்து பாடம் கற்பித்து கொடுத்தார் தர்ஷினி. இதனால் அடுத்து கதைகளம் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்