Ethirneechal Serial: ஈஸ்வரி கழுத்தை பிடித்து தள்ளும் குணசேகரன்.. கதறும் குடும்பம்
Ethirneechal: ஈஸ்வரியிடம், இப்போது வரைக்கு அப்பா அப்பா என்ற வார்த்தையை தவிர வேற எதையும் தர்ஷினி சொல்லவில்லை அக்கா என்கிறார் ஜனனி.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலில் நேற்று ( மார்ச் 15 ) குணசேகரன் தன் மகள் தர்ஷினியை இவ்வளவு கொடுமை செய்து இருக்கும் தாய் ஈஸ்வரி இனிமேல் தன் மகளிடம் நெருங்க கூடாது என கட்டளையிடுகிறார்.
உடனே கதீர், எங்க அண்ணி பற்றி எங்களுக்கு தெரியும். அவர் இது போன்று செய்து இருக்க மாட்டார். இவர் சொல்வதை போல் எதுவுமே இல்லை என சொல்கிறார். உடனே கடுப்பான குணசேகரன் தன் தம்பியை கோபமாக பார்க்கிறார்.
மறுபக்கம் மருத்துவமனைக்கு சென்று இருக்கும் ஜனனி, கதீரிடம், ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைத்து இருப்பது பற்றி சொல்கிறார். உடனே அதிர்ச்சியில் வெளியே வந்து குணசேகரன், என்னது ஜாமீன் கிடைத்துவிட்டதா? என கேட்கிறார். மருத்துவமனையில் இருந்து தர்ஷினி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.