Ethirneechal Serial: குணசேகரனின் சதி.. டிராமாவில் சிக்கி போராடும் தர்ஷினி.. ஜீவானந்தம் நிலைமை என்ன?
Ethirneechal Promo: மயக்க நிலையில் இருக்கும் தர்ஷினி காப்பாற்றுங்க அப்பா என சத்தம் போடுகிறார். அப்பா என அவர் சொல்வதை ஜீவானந்ததை. ஆனால் குணசேகரன் அப்பா உன் பக்கத்தில் தான் இருக்கிறேன் என சொல்லி அறுதல் கூறுகிறார்.
Ethirneechal Today Promo: நாள் முழுவதும் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு என்றால் அது, சீரியல் தான். அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.
அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி ஆகிவிட்டால் உடனே பெண்கள் கண்டிப்பாக தொலைக்காட்சி முன்பு அமர்ந்து எதிர்நீச்சல் சீரியல் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
அதற்கு காரணமே எதிர்நீச்சல் சீரியலில் இடம் பெற்று இருக்கும் குணசேகரன் கதாபாத்திரம் தான். அதில் நடித்த வந்தவர் தான் மறைந்த மாரிமுத்து. அவரது கரடுமுரடான வில்லனிசம், டயலாக் பேசும் குணம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.
ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டி. ஆர். பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாக டி. ஆர். பியில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், குணசேகரனின் மகள் தர்ஷினி கடத்தல் தான். கிட்டதட்ட இரண்டு மாதங்களாக இது தான் சீரியலில் நடக்கிறது.
யார் கடத்தினார்கள் என்று ஒரு பக்கம் தீவிரமாக தேடப்பட்ட நிலையில் கடைசியில் தன் சொந்த மகளை குணசேகரன் தான் கடத்தி வைத்து இருந்தார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான பரபரப்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தர்ஷினியிடம் நீதிபதி நேரடியாக வாக்குமூலம் வாங்க வந்து இருக்கிறார். அவரை சுற்றி காவல் துறையினர், குணசேகரன், ஞானம், கதீர், கரிகாலன் ஆகியோர் நிற்கிறார்கள்.
மயக்க நிலையில் இருக்கும் தர்ஷினி காப்பாற்றுங்க அப்பா என சத்தம் போடுகிறார். அப்பா என அவர் சொல்வதை ஜீவானந்ததை. ஆனால் குணசேகரன் அப்பா உன் பக்கத்தில் தான் இருக்கிறேன், அப்பா இருக்கிறேன், எந்த பிரச்னையும் இல்லை. பயப்பட வேண்டாம் என அறுதல் சொல்கிறார்.
மறுபக்கம் தர்ஷினி வந்துவிட்டார் என்றால் ஜீவானந்ததை ஏதோ செய்துவிட்டு இங்கே வந்து மாற்றி பேசுகிறார்களா? என சந்தேகப்படுகிறார் ஈஸ்வர்.
மருத்துவமனையில் இருக்கும் கரிகாலன், கதீரிடம் நீ கிளம்பு, வீட்டிற்கு சென்று அங்கு இருக்கும் பொண்டாட்டி முந்தானை முடிந்து கொள் என சொல்கிறார். இதனால் கதீருக்கு கடும் கோபம் வந்துவிடுகிறது. கரிகாலனை அடித்துவிடுகிறார். அருகில் இருப்பாவர்கள் வந்து தடுக்க குணசேகரன் கோபமாக தனது தம்பியை பார்க்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்