தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: உயிருடன் சாட்சி சொல்ல வந்த அப்பத்தா.. அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் எதிர்நீச்சல்

Ethirneechal: உயிருடன் சாட்சி சொல்ல வந்த அப்பத்தா.. அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் எதிர்நீச்சல்

Aarthi Balaji HT Tamil
Jun 07, 2024 11:08 AM IST

Ethirneechal: அப்பத்தா எப்படி உயிருடன் வந்தார். என்ன நடந்தது என்பதுடன் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிருடன் சாட்சி சொல்ல வந்த அப்பத்தா.. அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் எதிர்நீச்சல்
உயிருடன் சாட்சி சொல்ல வந்த அப்பத்தா.. அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் எதிர்நீச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

பகல் சீரியல்களை விட இரவு சீரியல்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

குணசேகரன் இறப்பு

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டி. ஆர். பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.

இறுதிகட்டத்தில் எதிர்நீச்சல்

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், இன்று ( ஜூன் 7 ) ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

ரேணுகா கூறுகையில், " எங்களுக்கு ஏற்பட்ட எல்லா கஷ்டத்துக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கொடுக்க வேண்டும். இந்த நபரை மட்டும் விட்டுராதீங்க. அவர் செய்த கொடுமைகளை எல்லாம் இவ்வளவு இருக்கிறது என அழுகிறார்.

தொடர்ந்து நந்தினி பேசுகையில் “இன்று காலை கூட இவருக்கு எதிரா நீ பேசினால் உன்னோட பிள்ளையை பாக்க முடியாது என  மிரட்டிக்கிட்டு இருந்தாங்க என கணவரை கை காண்பித்து சொன்னார்”. 

ஜனனி அப்பத்தாவை பிளான் பண்ணி கொலை செய்தது பற்றி மனம் வருந்தி பேசுகிறார். அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அப்பத்தா கோர்ட்டில் என்ட்ரி கொடுக்கிறார். 

உயிருடன் வந்த அப்பத்தா

அனைவரும் எப்படி கொலை செய்யப்பட்ட அப்பத்தா திரும்பி வந்தார் என ஆச்சரியமாகபார்க்கிறார். இதை கனவில் கூட நினைத்து பார்க்காத குணசேகரன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ முடிந்தது. அப்பத்தா எப்படி உயிருடன் வந்தார். என்ன நடந்தது என்பதுடன் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்