Ethirneechal Serial: என்னங்க இது.. தர்ஷினியை கடத்தி வைத்து இருப்பது இவரா?.. அதுவும் இவங்களுடன் கூட்டணியா?
Ethirneechal: எதிர்நீச்சல், சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
Ethirneechal Serial Today Promo: வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சீரியல் தான். அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.
அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.
அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.
ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.
இதனிடையே தற்போது எதிர்நீச்சல் சீரியலில், அந்த வீட்டு பெண் தர்ஷினியை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். அது தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் எதிர்நீச்சல், சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் தர்ஷினிக்கு, போதை பொருளை வலுக்கட்டாயமாக கொடுத்து இருப்பது தெரியவந்தது.
குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைக்கிறார் என்பது தெரியவந்து உள்ளது.
குணசேகரன் தனது மகளை பத்திரமாக பார்த்து கொள். நான் வரும் போது போன் செய்கிறேன் என தர்ஷினியை கடத்தி வைத்துள்ள நபரிடம் போன் செய்து விஷயத்தை சொல்கிறார்.
மறுபக்கம் ஞானம் கொடுத்த பணத்தை கதீர் வாங்காத காரணத்தினால் விரக்தியில் இருக்கிறார். இந்த காட்சியால் கதையின் போக்கு எப்படி போக போகிறது என பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்