Ethirneechal Serial: பணத்தை வாங்க மறுத்த நந்தினி.. கதறும் ஞானம்.. பரபரப்பாக செல்லும் எதிர்நீச்சல் சீரியல்!
எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது

Ethirneechal Serial Today Promo: வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சீரியல் தான். அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.
அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.
அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.
ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.
இதனிடையே தற்போது எதிர்நீச்சல் சீரியலில், அந்த வீட்டு பெண் தர்ஷினியை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். அது தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
ஞானம் தன் கையில் இருக்கும் பணத்தை கதிரின் மகளுக்கு பள்ளி பீஸ் கட்டுவதற்கு கொடுக்கிறார். இதை அமைதியாக பார்த்து கொண்டு இருந்த நந்தினி வேண்டாம் என்று மறுத்து உள்ளார். மறுபக்கம் ஜீவானந்தம் தப்பித்து போனது ஆபத்தாக மாற கூடாது என ஜனனியுடன் காவல் துறையினர் எச்சரிக்கிறார்.
கதையின் போக்கு பரபரப்பாக செல்வதால் அடுத்து என்ன நடக்கும் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்