எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 8 எபிசோட்: மூட்டை முடிச்சுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 8 எபிசோட்: மூட்டை முடிச்சுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியல்..

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 8 எபிசோட்: மூட்டை முடிச்சுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியல்..

Malavica Natarajan HT Tamil
Published Mar 08, 2025 06:43 AM IST

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 8 எபிசோட்: ஆதி குணசேகரன் திரும்ப வீட்டிற்குள் வரலாம் என கோர்ட் தீர்ப்பு அளித்த நிலையில், வீட்டில் உள்ள பெண்கள் 4 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 8 எபிசோட்: மூட்டை முடிச்சுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியல்..
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 8 எபிசோட்: மூட்டை முடிச்சுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியல்..

எந்த பிரச்சனையும் இல்ல

சக்தியும் அண்ணனின் நிலையைக் கண்டு பரிதாபமடைந்து இத்தனை நாள் பெண்களின் பக்கம் நின்று பேசியவர், அண்ணனிடம் உள்ள நியாயத்தை பேசி வீட்டில் உள்ளோர்களிடம் சண்டை போட்டார். இதன் விளைவு நீதிமன்றத்தில் ஆதி குணசேகரன் வீட்டில் வந்து தங்க தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பெண்கள் தரப்பு கூறினர். இதனால், ஆதி குணசேகரன் அவரது வீட்டில் தங்க விதித்த தடையை நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீட்டை விட்டு வெளிய போங்க

இதைக் கேட்ட ஆதி குணசேகரனின் அம்மா விசாலாட்சி, வீட்டில் உள்ள பெண்களிடம் சென்று, இந்த வீட்டு பெரிய மனுசியா நான் சொல்றேன். நீங்க எல்லாரும் இந்த வீட்டை விட்டு வெளியே போங்க என கத்துகிறார். இதையடுத்து, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என 4 பேரும் தன்னுடைய பொருட்களை பேக் செய்து வெளியே வந்தனர்.

உள்ளே- வெளியே

ஆதி குணசேகரன் வீட்டு வாசலில் காலை வைக்கும் போதே பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினர். மேலும், இந்த வீட்டில் நாங்கள் இருக்கும் கடைசி நாள் இது தான். இனிமேல் நடக்கப்போகும் மாற்றம் எல்லாம் உள்ளே இருந்து இல்ல வெளியே இருந்து தான் என சபதம் எடுக்கின்றனர். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

பெண்களை குற்றம் சொன்ன சக்தி

முன்னதாக, டீக்கடையில் நடந்த அவமானத்தில் இருந்த சக்தியிடம் வீட்டார் கேள்விகளை அடுக்க, சக்தி எதற்குமே பிடி கொடுக்காமல் பேசினான். அதுமட்டுமல்ல, எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் இந்த வீட்டின் பெண்கள் ஒன்றாக கூடி, அதை அலசுவது தான் பிரச்சினை உருவாவதற்கு காரணம் என்று ஒரே போடாக போட்டான். தற்போது கூட ஈஸ்வரியின் பிரச்சினைக்காகதான் நீங்கள் எல்லோரும் சேர்ந்து உருட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.

சக்தியிடம் கெஞ்சும் ஆதி குணசேகரன்

இதையடுத்து கோயிலில் சக்தியை ஆதி குணசேகரன் சந்திக்கிறார். அப்போது நான் தற்போது பரோலில் வந்திருக்கிறேன். என்னை அறிவழகி மரியாதையாக நடத்தி அவளது வீட்டுக்கு கூப்பிடத்தான் செய்கிறாள். ஆனால், எனக்கு அங்கு செல்வதற்கு விருப்பமில்லை. இதனால் நான் நம்முடைய வீட்டில் தங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்; தயவு செய்து அதற்கு அனுமதி வாங்கி தருவாயா என்று கேட்டார்.

அண்ணனுக்காக பேசிய சக்தி

இதைக் கேட்டு கண்கலங்கிய சக்தி, உடனே வீட்டுக்குச் சென்று வீட்டு பெண்களிடம், இது குணசேகரன் வீடு, அப்படி இருக்கும் பொழுது, அவர் இங்கு வருவதற்கு முழுமையாக உரிமை இருக்கிறது என்றான்.அது சலசலப்பில் முடிந்தது. மேலும் ஆதி குணசேகரன் வீட்டிற்கு வந்தால் நாங்கள் முக்கிய முடிவு எடுக்க நேரிடம் என்றும் கூறினர்