எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 26 எபிசோட்: ஈஸ்வரி, தர்ஷன் காரசார விவாதம்.. அறிவுக்கரசிக்கு வார்னிங் தரும் சக்தி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 26 எபிசோட்: ஈஸ்வரி, தர்ஷன் காரசார விவாதம்.. அறிவுக்கரசிக்கு வார்னிங் தரும் சக்தி

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 26 எபிசோட்: ஈஸ்வரி, தர்ஷன் காரசார விவாதம்.. அறிவுக்கரசிக்கு வார்னிங் தரும் சக்தி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 26, 2025 06:38 PM IST

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 26 எபிசோட்: ஈஸ்வரி - தர்ஷன் இடையிலான கார சார உரையாடல், சக்தியை ட்ரிக்கர் செய்யும் அறிவுக்கரசி என இன்றைய எபிசோடில் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 26 எபிசோட்: ஈஸ்வரி, தர்ஷன் காரசார விவாதம்.. அறிவுக்கரசிக்கு வார்னிங் தரும் சக்தி
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 26 எபிசோட்: ஈஸ்வரி, தர்ஷன் காரசார விவாதம்.. அறிவுக்கரசிக்கு வார்னிங் தரும் சக்தி

சக்தி, தர்ஷனை சுற்றும் கதை

இதற்கிடையே குந்தவை, என்னால் உங்களுக்குள் பிரச்னை வரும் என்று நினைத்தால் உடனடியாக உன்னை விட்டு விலகிவிடுகிறேன் என சக்தியிடம் கூறுகிறாள். மற்றொரு காட்சியில் குணசேகரன் வீட்டில் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, அறிவுக்கரசி, சக்திக்கு பொண்டாட்டி மேல பாசம் ஓவரோ ஓவர் என சொல்கிறாள். இதைக்கேட்ட சக்தி, கோபத்துடன் எங்கள் வீட்டு விஷயத்தை பற்றி பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என சத்தமாக சொல்கிறான். சக்தி மற்றும் தர்ஷனை மையப்படுத்திய பரபர காட்சிகளுடன் இன்றைய எபிசோட் இருக்கும் என தெரிகிறது.

ஈஸ்வரி - தர்ஷன் கார சார உரையாடல்

இதைத்தொடர்ந்து இன்றைய எபிசோட் ப்ரிவியூவாக 2 நிமிட காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோயிலில் அமர்ந்திருக்கும் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் கோயிலில் அமர்ந்திருக்க, தர்ஷன் வந்து ஈஸ்வரியிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறான்

தர்ஷினி பிடித்த விஷயத்தை செய்வதற்கு எவ்வளவு சப்போர்ட் செஞ்ச. அப்பா மட்டுமில்லாம, வீட்டல இருக்குற யாருக்கும் அவ பாக்ஸிங் செய்யறது சுத்தம பிடிக்கல. இருந்தாலும் அவளுக்கு சப்பார்டே பண்ண நீ, நான் பிடிச்சத செய்யறதுக்கு மட்டும் செய்யக்கூடாதுன்னு சொல்ற என கேட்கிறான்

இதற்கு, நீ பேசும் கம்பாரிசன் முட்டாள்தனமா இருக்க. அவ அவளுடனை வாழ்க்கைக்காக போராடுனா. அவ குறிக்கோளை அடையறதுக்கு முயற்சி பண்ணா. அதுக்காகத்தான் நான் சப்போர்ட் பண்ணேன். உன்ன மாதிரி சீசனுக்கு ஒரு பொண்ண ஏமாத்துறதுக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்.

பார்கவியை லவ் பண்ணியிருக்க. அவள விரட்டி விரட்டி காதலிச்சிட்டு, அவ வீட்ல அப்பாவ பார்த்து, அவங்க வீட்ல ஒரு மனுஷன் மாதிரி பழகிட்டு காசு, பணம் இதெல்லாம் பார்த்த பிறகு விட்டு ஓடணும்னு நினைக்குற.

இந்த அறிவுக்கரசி குடும்பம் நல்ல குடும்பமா டா? நீ கட்டிக்கபோற பொண்ணு அன்புக்கரசிக்கு என்ன வயசு இருக்கும்னு சொல்லு. முதல்ல உனக்கு கல்யாணம் பண்ற தகுதி உனக்கு வந்துச்சா. பணத்த பார்த்ததும் நல்ல மனுஷங்களையும், நேசிக்கிறவங்களையும் விட்டுட்டு போற உனக்கு நான் எதுக்கு சப்போர்ட் பண்ணனும்னு நினைக்குற.

இதற்கு, தர்ஷன் திரும்ப திரும்ப அதையே பேசாத அம்மா. நீ எந்த காலத்துல இருக்க. இப்ப இருக்கிற ஜெனரேஷன் பசங்க எப்படி இருக்காங்க தெரியுமா? எவ்வளவு லவ் பண்ணாலும் பிடிக்கலைன்னா அசால்டா பிரேக்கப் பண்ணிட்டு போயிட்ட இருக்காங்க. அதை ஒரு பெரிய விஷயமா ஏன் மாத்துற.

பின் தர்ஷனிடம் பேசும் ஈஸ்வரி, நீ வீட்டில் வைத்து பேசினதும், அந்த பொண்ணு உன்னை தூக்கி போட்டு போயிட்டே இருந்தா. அப்பவும் அவள விடாம விரட்டிட்டு போய் அடிச்சு, அவ அப்பாவ அடிச்சு போலீஸ் ஸ்டேஷன்னு இழுத்துட்டு போய் அவங்க மேல அசிங்கமான சாயத்தை பூசுனது நீதான். இப்படியாக ஈஸ்வரிக்கும், தர்ஷனுக்கு இடையே கார சாரமான உரையாடல் நடக்கிறது.

எதிர்நீச்சல் நேற்றைய எபிசோட்

ஜனனியிடம் என் பிரண்ட் ஓட சேர்ந்து பிசினஸ்ல ஒர்க்கிங் பார்ட்னராக சேர்ந்திருப்பதாகவும், அந்த பிரண்ட் யாருன்னு உனக்கு தெரியாது என்றும் கூறி இருக்கிறார். எது எப்படி இருந்தாலும் சக்தி வீட்டில் இருக்கும் பிரச்னைகளை எல்லாம் மறந்து புதிதாக வேலையில் கவனம் செலுத்தி இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டு வாழ்த்து தெரிவித்தார்.

இப்படியான சூழலில், குந்தவை தான் சக்திக்கு வேலை கொடுத்ததுடன் காரையும் பரிசாக கொடுத்தார் என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது.வீட்டுக்கு திரும்பிய சக்தியை குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். சக்தி வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் திணறுகிறான்.

அப்போது, ஆதி குணசேகரன், குந்தவையை அழைக்க அவள் ரூமில் இருந்து வெளியே வருகிறாள். இதைப் பார்த்து திகைத்துப் போன சக்தி என்ன சொல்வதென்றே தெரியாமல் பதற்றத்தில் நிற்க, இனி சக்தி தம்பிக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும். கல்யாண வேலைய பாக்க அனுப்புனா கல்யாணம் பண்ணவே பொன்ன பாத்திருக்காரு என சொல்ல, சக்தி முழித்துக் கொண்டிருக்கிறான்.

வீட்டை விட்டு காலி செய்து வெளியே வந்த பெண்கள் நான்கு பேரும் கோயிலுக்கு சென்றனர். அவர்கள், அங்கே பேசிக் கொண்டிருக்கும் போது, சக்தி - ஜனனி இடையே இருக்கும் பிரச்னை குறித்தும் பேச்சு எழுகிறது. அப்போது ஜனனி எனக்கும் சக்திக்கும் இடையே இருந்தது சின்ன குழப்பம் தான். இப்போ அதுகூட இல்ல. இப்போ நார்மல் ஆகிட்டேன் என சொல்கிறாள்.

இதைக் கேட்ட ஈஸ்வரி, நீ இப்படி சொல்றது தான் எங்கள இன்னும் சங்கடப்பட வைக்குது என சொல்கிறாள். மறுபக்கம், வீட்டில், ஆதி குணசேகரனின் அம்மா விசாலாட்சி மருமகள்களிடம் பேசி பரிகாரம் செய்யச் சொல்லுமாறு வீட்டில் உள்ள ஆண்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். இதைக் கேட்ட அறிவுக்கரசிக்கு எரிச்சல் அதிகரித்துள்ளது.

தர்ஷனின் கல்யாணத்துக்கு ஓலை எழுதும் நிகழ்வுக்காக அறிவுக்கரசி குடும்பத்தோடு வந்து இறங்கினாள். கூடவே, இனி குணசேகரன் மாமா வீட்டில்தான் நாங்கள் தங்கப்போகிறோம் என்ற குண்டையும் தூக்கிப்போட்டாள். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.

இதற்கிடையே சாமியார் ஒருவர் ஏதோ போனில் பேச, குணசேகரனின் அம்மா நிகழ்வை தடை செய்யும் விதமாக பேசுகிறாள். இதனையடுத்து குணசேகரன், அறிவுக்கரசி உள்ளிட்டோர் மூட நம்பிக்கையையெல்லாம் நம்பிக்கொண்டு இருக்காதீர்கள் என்று சொல்ல, அவர் கேட்ட பாடில்லை. இப்படியாக நேற்றைய எபிசோட் முடிவுற்றது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.