எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 19 எபிசோட்: பார்கவியால் பற்றி எரியும் குணசேகரன் வீடு.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 19 எபிசோட்: பார்கவி கொடுத்த புகாரால், ஆதி குணசேகரன் வீட்டிற்குள் புகுந்த போலீஸ் அத்தனை பேரையும் மிரட்டி வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 19 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரன் தன் மகன் தர்ஷனின் திருமணத்தை எத்தனை எதிரப்புகள் வவந்தாலும் அதை மீறி நடத்திக் காட்ட முயற்சி செய்து வருகிறார்.
சமாதான பேச்சு நடத்தும் குணசேகரன்
அதே சமயத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்களின் வாழ்க்கையை நிலைகுலைய செய்ய வேண்டும் என்றும் திட்டம் தீட்டி வருகிறார். இதற்காக குழந்தைகளை கருவியாக பயன்படுத்தவும் திட்டம் தீட்டி, வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை எல்லாம் வரவைத்து, அவர்களிடம் சாக்லெட் எல்லாம் கொடுத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத குழந்தைகள் டியூசன் போகிறோம். எங்களுக்கு படிக்க நிறைய இருக்கிறது எனக் கூறி நழுவுகின்றனர்.
குழந்தைகளை பார்க்க புறப்பட்ட பெண்கள்
இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆதி குணசேகரன், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே போனால், அவர்களின் அம்மாவை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என நினைத்து தம்பி ஞானத்தை பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவலை தர்ஷினி நந்தினியிடம் சொல்ல, பிள்ளைகளை பார்க்க ஜனனியை தவிர்த்து அனைவரும் சென்றனர்.
கோர்ட்டிற்கு போன ஜனனி
அந்த சமயத்தில் ஜனனிக்கு போன் செய்த பார்கவி, தன்னை போலீசார் கோர்ட்டுக்கு வர சொன்னதாகவும், இன்னைக்கு ஜடஜ் பேசணும்ன்னு சொன்னதாகவும் ஜனனியிடம் தகவல் சொன்னார். இதையடுத்து அடித்து பிடித்து கோர்ட்டிற்கு சென்ற ஜனனி, பார்கவியுடன் ஜட்ஜை பார்த்து பேசினார். அப்போது, இந்த கேஸ்ல 2 நாளா விசாரித்த விவரங்களை தரச்சொல்லி போலீஸ்காரர்களிடம் ஜட்ஜ் கேட்டார்.
பார்கவிக்கு ஆதரவாக வந்த புது எஸ்பி
அதற்கு போலீஸ் தரப்பிலிருந்து சரியான பதில் வராததால், அவரை இந்த கேஸில் இருந்து விடுவித்து, பெண் எஸ்பி கொற்றவையை ஜட்ஜ் நியமித்திருக்கிறார். பின் அவர் கேஸ் குறித்து ஜார்ஜ் எடுத்த உடேனேயே பார்கவியுடன் நேராக ஆதி குணசேகரன் வீட்டிற்கு தான் வந்தனர்.
அப்போது, பார்கவியை பார்த்த மொத் த குடும்பமும் அவளுக்கு எதிராக செயல்படத் தொடங்கியது. வீட்டிற்குள் போலீஸ்காரர்கள் இருந்தும் அதுபற்றி எந்த சலனமும் இல்லாமல் ஆளாளுக்கு பேச அங்கு கலவரம் வெடித்தது.
எச்சரித்த போலீஸ்
அப்போது, கதிர் போலீசாரிடம் எகிற, உங்க அண்ணன் பரோலில் தான் வந்திருக்காரு. அத கெடுத்துவிட வேனாம் என எச்சரித்த நிலையில், வீட்டில் இருந்த அறிவுக்கரசி, பார்கவியும் அவளோட அப்பாவும் என்ன வேலை பாத்திட்டு இருந்தாங்க தெரியுமா என கேட்டதும் கோபமடைந்த கொற்றவை அறிவுக்கரசியை தாக்க வந்தார்.
இது இப்படி இருக்க, பிள்ளைகளை பார்கக சென்ற பெண்களை எச்சரித்து அவர்களிடமிருந்து குழந்தைகளை பிரித்து வீட்டிற்கு கூட்டி வந்தார் இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

டாபிக்ஸ்