எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 18 எபிசோட்: கொடூர திட்டத்தில் அறிவு.. கோர்ட்டுக்கு போன பார்கவி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 18 எபிசோட்: வீட்டில் உள்ள பெண்கள் தன்னை அசிங்கப்படுத்தியதால் அவர்களை எப்படியாவது அழித்து காட்ட வேண்டும் என அறிவுக்கரசி கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 18 எபிசோட்: எதிர் நீச்சல் சீரியலில், ஆதிகுணசேகரனின் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்களுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக வந்து கொண்டிருக்கிறது. அதர்கான வேலைகளை திட்டம் தீட்டி பக்காவாக செய்து வருகிறார் அறிவுக்கரசி.
பெண்களுக்கு எதிராக திட்டம் போடும் அறிவு
அறிவுக்கரசி முதல் முறையாக ஆதி குணசேகரன் வீட்டிற்கு வந்த போது, வாசலில் அமர்ந்திருந்த ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என எல்லோரும் அறிவுக்கரசியை முருகன் கோவிலுக்கு போக காசு வாங்க காரில் வந்ததாக கிண்டல் செய்தனர். அத்தோடு அவர்களுடைய கலரை பார்த்தாலே தெரியாதா அவர்கள் யாரென்று என கரிகாலன் ஏற்றிவிட அறிவுக்கரசி இன்னும் கோபமானார். வஞ்சத்தை கொட்டிய அறிவு
வீட்டில் உள்ளவர்களை ஏய்த்துவிட்டு தொழிலதிபராகும் கனவோடு இருக்கும் அவர்களின் கதையை முடிக்காமல் ஓய மாட்டேன். அதிலும் அந்த ஜனனி ஏதாவது செய்து எனக்கு குடைச்சல் கொடுத்திட்டே இருக்கா அவளுக்கு தான் முக்கியமா இருக்கு என பேசி, தன் மனதில் இருக்கும் வஞ்சத்தை கொட்டித் தீர்த்தார்.
குணசேகரனுக்கு அட்வைஸ்
அதற்கு தகுந்தாற் போலவே, ஆதி குணசேகரனையும் அவரது தம்பிகளையும் தூண்டிவிட்டு, அவர்கள் இந்த வீட்டை விட்டு போனது தவறு என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவங்க இங்க இருந்து போனா ரொம்ப சந்தோஷமா தான் இருப்பாங்க. அதுனால அவங்கள சந்தோஷமா இருக்க விடவே கூடாது.
அவங்க நாலு பேரையும் தனித்தனியா பிரிச்சு அடிக்கணும். அதுக்கு இந்த குழந்தைங்கள தான் துருப்பா பயன்படுத்தனும் என அறிவுக்கரசி ஆதி குணசேகரனுக்கு ஐடியா சொல்கிறாள். இதைக் கேட்ட குணசேகரனும் தன் தம்பிகளுக்கு இதுதொடர்பாக அட்வைஸ் செய்கிறார்.
பறிபோன நந்தினி ஆர்டர்
இதை கச்சிதமாக முடிக்க நினைத்த குணசேகரன், முதலில் நந்தினியின் மசாலா கம்பெனி ஆர்டருக்கு ஆப்பு வைத்தார். அதைத் தொடர்ந்து வீட்டில் உள்ள பிள்ளைகளை அழைத்த குணசேகரன், அவர்களிடம் பாசமாக இருப்பது போல் நடித்து பேசி வருகிறார். நீங்க இந்த வீட்டு வாரிசு. உங்கள இப்படி கஷ்டப்பட வைக்க மாட்டோம் என பாசமாக பேசி அவர்களை தங்கள் கட்டுக்குள் வைக்க அடுத்தடுத்த வேலைகளை பார்த்து வருகின்றனர்.
கோர்ட்டிற்கு போன பார்கவி
இதனால், அடிமேல் அடிவாங்கி குழம்பிப் போய் இருக்கும் பெண்கள், தற்போது அவர்களது பிள்ளைகளை நினைத்தும் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். இதனால், அவர்களாக மெல்ல மெல்ல இந்ச ஆட்டத்தில் சிக்குவது போல் தெரிகிறது.
இது ஒருபுறம் இப்படி இருக்க, தர்ஷனால் காதலித்து ஏமாற்றப்பட்ட பார்கவி கோர்ட்டுக்கு சென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் ஜனனிக்கு போன் செய்தார். அப்போது, என்ன ஏது என விசாரித்த ஜனனி, கிளம்பி கோர்ட்டிற்கு சென்றார். இது தொடர்பான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது

டாபிக்ஸ்