எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: ஹோட்டல் கதவைத் தட்டும் பிரச்சனை.. வாயைப் பிளந்த சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: ஹோட்டல் கதவைத் தட்டும் பிரச்சனை.. வாயைப் பிளந்த சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: ஹோட்டல் கதவைத் தட்டும் பிரச்சனை.. வாயைப் பிளந்த சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Mar 11, 2025 08:30 AM IST

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கி இருக்கும் பெண்களிடம் ஒருவன் குடித்துவிட்டு தகராறு செய்கிறான். இதனால் பெண்கள் எல்லாம் பதற்றமாக இருக்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்:  ஹோட்டல் கதவைத் தட்டும் பிரச்சனை.. வாயைப் பிளந்த சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: ஹோட்டல் கதவைத் தட்டும் பிரச்சனை.. வாயைப் பிளந்த சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்

வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள்

இதையடுத்து, ஆதி குணசேகரனின் வீட்டில் இருந்து அடிமையாகி இருப்பதை விட வீட்டை விட்டு வெளியேறி தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

இதனால், ஆதி குணசகரன் இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முன்னே, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகிய 4 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். அதற்கு முன்னதாக வீட்டில் உள்ள குழந்தைகளிடம் இது உங்க வீடு. இங்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு என சொல்லிவிட்டு கிளம்பினர்.

ஹோட்டலுக்கு வரும் பிரச்சனை

பின், 4 பேரும் இதுவரைக்கும் அந்த வீட்ல இருந்துட்டு பேசிட்டு இருந்தோம். இனிமேல், நம்மள தடுக்க யாரும் இல்ல. அதுனால இந்த வீட்ட விட்டு வெளிய போனதுக்கு அப்புறமும் நாம எல்லாம் ஒன்னா இருக்கணும்ன்னு அவசியம் இல்ல. நாம எல்லோரும் அவங்க அவங்களோட வேலைய செய்ய ஆரம்பிப்போம் என முடிவெடுக்கின்றனர்.

இதையடுத்து, 4 பேரும் தற்காலிகமாக தங்குவதற்கு ஹோட்டலில் ரூம் புக் செய்கின்றனர். அப்போது, அந்த ஹோட்டலில் தங்கி இருந்த ஒருவன், பெண்கள் மட்டும் ரூமில் இருப்பதை அறிந்து அவர்களிடம் பிரச்சனை செய்ய வந்தான். இதனால், பெண்கள் பதற்றத்துடனும் கோவமாகவும் இருக்கின்றனர்.

அறிவுரை வழங்கும் விசாலாட்சி

இது ஒருபுறமிருக்க, பெண்கள் எல்லாம் வீட்டை விட்டு போனதை சற்றும் எதிர்பார்க்காத ஆதி குணசேகரன் வீட்டின் ஆண்கள் எல்லாம் ஆடிப் போய் இருக்கின்றனர். ஆனால், இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எல்லோரும் நல்லபடியாக இருக்க வேண்டும். ஆதி குணசேகரன் வீட்டில் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க வேண்டும் என தன் மகன்களுக்கு அறிவுரை வழங்குகிறாள்.

மொத்தமாக மாறி நிற்கும் சக்தி

வீட்டில் சமையலுக்கு கூட பெண்கள் இல்லாத நிலையில், கரிகாலனே சமையல்காரனாகவும் மாறுகிறான். ஆனால், அவனை வீட்டில் உள்ள குழந்தைகள் சற்றும் மதிக்கவில்லை. என்ன தான் தன் அண்ணன் மீது கோபம் இருந்தாலும், தற்போது அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் பேசும் சக்தி, இப்போது குணசேகரனின் தம்பியாகே மாறி வருகிறார்.

யார் அந்த பெண்

டீ குடிக்க கூட காசு இல்லாமல் அசிங்கப்பட்டு நின்ற சக்தி, இப்போது வேலை விஷயமாக அவர் வெளியே வந்துள்ளார். அப்போது, அவர் சந்திக்க வந்த பெண்ணை பார்த்து ஷாக் ஆகிறார். யார் அந்தப் பெண். சக்திக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு. ஜனனியை பிரிந்துள்ள நிலையில், சக்திக்கும் இந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் விட்டுவிட்டது போன்ற ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.