Ethirneechal: காசுக்காக பெண்ணின் வாழ்க்கையில் விளையாடத் துணிந்த தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: காசுக்காக பெண்ணின் வாழ்க்கையில் விளையாடத் துணிந்த தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்..

Ethirneechal: காசுக்காக பெண்ணின் வாழ்க்கையில் விளையாடத் துணிந்த தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்..

Malavica Natarajan HT Tamil
Published Feb 17, 2025 04:50 PM IST

Ethirneechal: குடும்ப சொத்துக்காகவும், சித்தப்பாக்களின் ஐடியாவைக் கேட்டும் தர்ஷன் தான் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் கூறியுள்ளான்.

Ethirneechal: காசுக்காக பெண்ணின் வாழ்க்கையில் விளையாடத் துணிந்த தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்..
Ethirneechal: காசுக்காக பெண்ணின் வாழ்க்கையில் விளையாடத் துணிந்த தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்..

பெண் பார்க்க சென்ற தர்ஷன்

இதனால், சித்தப்பாக்கள் சொன்னது போலவே, தர்ஷன் அறிவுக்கரசியின் மகளை பெண்பார்க்க சென்றார். அந்த சமயத்தில் தான், தர்ஷன் காதலித்து வந்த பார்கவி என்ற பெண் தர்ஷனின் வீட்டிற்கு வந்து அவரது அம்மா மற்றும் சித்திக்களிடம் தர்ஷன் காதலித்து ஏமாற்றியதை கூறி அழுதுள்ளார்.

அப்போது, தர்ஷன் தனக்கு அனுப்பிய மெசேஜ்கள், ஆடியோக்களை எல்லாம் குடும்பத்தினர் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பார்கவியால் பதட்டமடையும் தர்ஷன்

இதை எல்லாம் பார்த்து ஆத்திரமடைந்த ஈஸ்வரி தர்ஷனுக்கு போன் செய்கிறாள். ஆனால், தர்ஷனோ பெண் பார்க்கும் குஷியில் போனை எடுக்க மறுக்கிறான்.

அதே சமயத்தில், பார்கவி போன் செய்ததும் பதற்றத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பேசுகிறான். அப்போது, பார்கவி, நான் உங்க வீட்ல தான் இருக்கேன். உன்ன ஜஸ்ட் ப்ரண்ட்டுண்ணு தான் சொல்லிருக்கேன். நம்மல பத்தி எதுவும் சொல்லல. நீ வீட்டு மட்டும் வா. உன்ன பாத்துட்டு வெளிய வச்சே பேசிட்டு அப்படியே நான் போயிடுறேன்னு சொல்கிறாள்.

ஆத்திரமடையும் தர்ஷன்

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தர்ஷன், உன்னால என் நிம்மதியே போச்சு. யாரக் கேட்டு வீட்டுக்கு வந்த. எதாவது வாயத் தொறந்தா அப்படியே உன்ன வெட்டி போட்டுடுவேன். என்ன நிம்மதியா இருக்கவே விட மாட்ட இல்ல என திட்டி வீட்டிற்கு வருவதாக சம்மதிக்கிறான்.

பயத்தில் ஈஸ்வரி

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர், தர்ஷன் மேல் ஆத்திரம் பொங்க நிற்கின்றனர். மேலும், இன்னைக்கு காசுக்காக காதலிச்ச பொன்ன ஏமாத்திட்டு போறான்னா, நாளைக்கு அவன் என்ன வேணும்ன்னாலும் செய்வான் என ஈஸ்வரி தர்ஷனின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்து மிகவும் பயந்து போய் இருக்கிறார்.

ஜனனியின் பிளான்

அந்த சமயத்தில், அறிவுக்கரசி ஆதி குணசேகரன் அண்ணன் வெளிய வர்றத திருவிழா மாதிரி கொண்டாடனும் என சொல்லிக் கொண்டிருக்க, இங்கு ஜனனி, கல்யாணம் நடந்தா தான ஆதி குணசேகரன் வெளிய வருவாரு. நாம கல்யாணத்தையே நிறுத்திட்டா என்ன என திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோவை சன்டிவி வெளியிட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.