Ethirneechal Serial: ஆதி குணசேகரன் இருந்தாலும் இல்லைன்னாலும் இதான் ரூல்.. முறுக்கி நிற்கும் கதிர்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal Serial: ஆதி குணசேகரன் இருந்தாலும் இல்லைன்னாலும் இதான் ரூல்.. முறுக்கி நிற்கும் கதிர்..

Ethirneechal Serial: ஆதி குணசேகரன் இருந்தாலும் இல்லைன்னாலும் இதான் ரூல்.. முறுக்கி நிற்கும் கதிர்..

Malavica Natarajan HT Tamil
Published Feb 13, 2025 12:12 PM IST

Ethirneechal Serial: ஆதி குணசேகரன் இந்த வீட்டில் இருந்தாலும் இல்லை என்றாலும் இந்த வீட்டில் அவரு நினைக்குறது தான் நடக்கும் என கதிர் வீட்டில் உள்ளவர்களை மிரட்டி இருக்கிறார்.

Ethirneechal Serial: ஆதி குணசேகரன் இருந்தாலும் இல்லைன்னாலும் இதான் ரூல்.. முறுக்கி நிற்கும் கதிர்..
Ethirneechal Serial: ஆதி குணசேகரன் இருந்தாலும் இல்லைன்னாலும் இதான் ரூல்.. முறுக்கி நிற்கும் கதிர்..

கதிர் பெயருக்கு வந்த சொத்து

இதற்கிடையில், தற்போது ஈஸ்வரி ஆதி குணசேகரன் மீது கொடுத்த புகாரின் காரணமாக அவர் ஜெயிலில் உள்ளார். அந்த சமயத்தில், வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்த தன் சொத்துகளை எல்லாம் கதிரின் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்தார் குணசேகரன்.

இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆதி குணசேகரனாகவே மாறி வரும் கதிர், வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என மிரட்டியும் அதட்டியும் வருகிறான்.

திட்டம் போட்டு கெடுத்த கரிகாலன்

இந்நிலையில் தான், தன் சொந்தக் காலில் நின்று மேலே வர வேண்டும் என வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கும் வீட்டுப் பெண்களை எல்லாம் அதட்டி வருகிறான். இருந்தாலும் இதெற்கெல்லாம் அடிபணியாத பெண்கள் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

ஆனால், இதை அப்படியே விடக்கூடாது என நினைத்த கரிகாலன், வீட்டுப் பெண்கள் எல்லாம் அவர்களது வேலையை பார்க்க கிளம்பி விட்டனர் என கதிரிடமும் ஞானத்திடமும் கொளுத்திப் போட்டுள்ளார்.

பிரச்சனை செய்த ஞானம்

இதனால், ஆத்திரம் தாங்காத ஞானம் அவரது மனைவி நாட்டியம் சொல்லித் தரும் இடத்திற்கு செல்கிறான். அங்கு, நாட்டியம் சொல்லிக் கொடுத்திருந்தவளை நிறுத்தி சண்டை செய்து இனி இவள் நடனம் சொல்லித்தர வரமாட்டாள், இது வட்டியுடன் உள்ள பணம் என முகத்தில் அடித்தாற் போல கொடுத்து மனைவியின் கையைப் பிடித்து தரதரவென இழுத்து வந்தார்.

இதுபற்றி, அவர் வீட்டில் வந்து சொல்ல, வீடே பிரச்சனையை பெரிதாக்குகிறது. அதற்குள்ளாக, பொம்பளைங்களா லட்சணமா வீட்டிலேயே இருக்க வேண்டும் என அவரது மாமியார் விசாலாட்சியும் பேசுகிறார்.

அண்ணன் இருந்தாலும் இல்லைன்னாலும்

இதைக் கேட்டு டென்ஷன் ஆன ஜனனி, இங்க தான் ஆதி குணசேகரனே இல்லையே அந்த ஆளே ஜெயிலுக்கு போனதுக்கு அப்புறம் என்ன இதெல்லாம் என கேட்டு சண்டையிடுகிறாள். அப்போது, ஆதி குணசேகரன் இந்த வீட்டில் இருந்தாலும் இல்லை என்றாலும் இந்த வீட்டில் அவரு நினைக்குறது தான் நடக்கும் என கதிர் தன் தொனியை மாற்றி பேசுகிறான். அத்தோடு வில்லத்தனமான பார்வையையும் பார்க்கிறான். இதற்கான புரோமோவையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.