தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ethirneechal Serial Episode Promo On March 18

Ethirneechal: இது என்ன அடுத்த ட்விஸ்ட்.. தர்ஷினியை திருமணம் செய்ய திட்டம் போட்ட கரிகாலன்!

Aarthi Balaji HT Tamil
Mar 18, 2024 01:54 PM IST

Ethirneechal Serial: மறுபக்கம் கரிகாலன், கல்யாணம் செய்தால் எல்லா பித்தும் தெளிந்துவிடும் என சொல்ல சக்திக்கு செம கோபம் வந்துவிடுகிறது.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

அதை கேட்ட ஜனனி, நான் மற்றவர்கள் போல் எனக்கு என்ன என்று யோசிக்க கூடியவள் கிடையாது என்றார். பிறகு வீட்டிற்கு வரும் ஈஸ்வரி தன் மகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் மகளை, தாய் பார்க்க கூடாது என நீதிபதி சொல்லிவிட்ட காரணத்தினால் குணசேகரன் தர்ஷினியை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கடும் வாக்குவாதம் நடக்கிறது. 

ஆர்ப்பாட்டம் செய்யும் ஈஸ்வரியை சமாதனம் செய்து ஜனனி வெளியே அழைத்து வந்தார். மேலும் தர்ஷினி அப்பா என்ற வார்த்தையை தவிர வேற எதையும் சொல்லவில்லை. அதனால் என்ன நடக்கிறது என தெரியவில்லை என சொல்கிறார். சற்று யோசித்து பார்த்த ஈஸ்வரி மகள் தரிஷினி அப்பா என அழைப்பது  ஜீவானந்தனை என்றார். ஏற்கனவே அப்பா பாசம் கிடைக்காத தர்ஷினி  ஜீவானந்தனை அப்பா என அழைத்து வந்ததை குறிப்பிட்டார்.

ஈஸ்வரி இருப்பது பிடிக்காமல் குணசேகரன் வெளியில் வந்து  வெளியே செல்லும் படி கட்டளையிட்டார். ஆனால் ஈஸ்வரி முடியாது என சொல்ல விசாலாட்சி மகனிடம் பேசி தங்க வைத்தார். மகளை பார்க்க விடாமல் கொடூரமாக நடந்து கொள்ளும் கணவர் குணசேகரனின் குணத்தை நினைத்து வீட்டின் வாசல் முன்பு ஈஸ்வரி கதறி அழுவதுடன் சீரியல் முடிந்தது. 

எதிர்நீச்சல் இன்று

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், தர்ஷினிக்கு, குணசேகரன் பற்றி ஏதோ உண்மை தெரிந்து இருக்கிறது. அவரை பற்றி எல்லா விஷயங்களையும் அவ சொல்லிவிடுவார் என்ற பயத்தில் இருக்கிறார் என்றார் ஜனனி. உடனே அனைவரும் அவர் சொல்வதை அதிர்ச்சியாக பார்க்கிறார்.

மறுபக்கம் கரிகாலன், கல்யாணம் செய்தால் எல்லா பித்தும் தெளிந்துவிடும் என சொல்ல சக்திக்கு செம கோபம் வந்துவிடுகிறது. பொத்திக்கிட்டு நில்லு, இல்ல சம்பவம் செஞ்சுட்டு போயிடுவேன் என மிரட்டல் விடுகிறார். 

ஹாலில் வந்து அமர்ந்து இருக்கும் தர்ஷினியை பார்க்க ஆசையாக உள்ளே வந்தார் ஈஸ்வரி. மகளை நீண்ட நாள் கழித்து பார்ப்பதால் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழுகிறார் ஈஸ்வரி. இதை பார்த்து பதறிப்போன குணசேகரன், கரிகாலனிடம் போலீஸுக்கு போன் போடு என கூச்சலிட்டார். உடனே அவரும் இது தான் சரியான நேரம் என போன் செய்ய போனார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்