எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 3 எபிசோட்: மீண்டும் வீட்டிற்கு வரும் பெண்கள்.. தயாராக இருக்கும் ஆதி தம்பிகள்.. எதிர்நீச்சல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 3 எபிசோட்: மீண்டும் வீட்டிற்கு வரும் பெண்கள்.. தயாராக இருக்கும் ஆதி தம்பிகள்.. எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 3 எபிசோட்: மீண்டும் வீட்டிற்கு வரும் பெண்கள்.. தயாராக இருக்கும் ஆதி தம்பிகள்.. எதிர்நீச்சல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 03, 2025 10:05 AM IST

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 3 எபிசோட்: வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள் எல்லாம் ஆதி குணசேகரனுக்கு எதிரான திட்டங்களோடு மீண்டும் வீட்டிற்கு வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 3 எபிசோட்: மீண்டும் வீட்டிற்கு வரும் பெண்கள்.. தயாராக இருக்கும் ஆதி தம்பிகள்.. எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 3 எபிசோட்: மீண்டும் வீட்டிற்கு வரும் பெண்கள்.. தயாராக இருக்கும் ஆதி தம்பிகள்.. எதிர்நீச்சல்

அரிவாளோடு கிளம்பும் கதிர்

அதற்காக வீட்டில் உள்ளவர்களிடம் தண்ணீரில் ஏதோ கலந்து குடிப்பது போல நடிப்பது போல் இன்று வெளியான ப்ரிவியூவில் காட்டப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான், கதிர் வீட்டை விட்டு வெளியே போன பெண்களை வெட்ட அரிவாளோடு கிளம்பத் தயாராகிறான்.

பளார் விட்ட விசாலாட்சி

ஆனால், அவனை விசாலாட்சியும் சக்தியும் எவ்வளவே தடுத்தும் முடியவில்லை. இதனால் கோவமடைந்த விசாலாட்சி கதிரை கன்னத்திலேயே பளார் என அறைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கதிர் அமைதியானான். இதனை வீட்டில் உள்ள குழந்தைகள் எல்லாம் பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சக்தி- கதிர் சண்டை

பின் கதிருக்கு சக்தி அறிவுரை சொன்னதும், அவன் மீண்டும் பெண்கள் பக்கம் சென்றதாக நினைத்துக் கொண்டு அவனை கதிர் திட்டினான். அத்தோடு இந்த வீட்டில் இருந்துவிட்டு பெண்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டாம் எனவும் திட்டினான். அப்போது குறுக்கிட்ட சக்தி, நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணல. நீ ஏவாது கிறுக்குத் தனமாக பண்ண வேண்டாம் என கத்தினான்.

ஆதி குணசேகரனின் திட்டம்

இதற்கிடையில், பெத்த பொன்னையே அந்தக் கொடுமை பண்ணின மனுஷன் மத்தவங்கள என்ன பண்ண போறாங்களோ என பெண்கள் எல்லாம் புலம்பிக் கொண்டிருந்தனர். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வெளியான ஸ்பெஷல் ப்ரோமோவில், வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள் எல்லாம் திரும்ப வீட்டிற்குள் வருவது போல் காட்டுகின்றனர். அப்போது, அவர்களை தன் தம்பிகளை வைத்தே பிரித்து ஆளும் சூழ்ச்சியை கையாள உள்ளதாகவும் கூறினார்.

பெண்களின் சபதம்

இந்த வீட்டை அதிகாரத்தாலும் ஆளுமையாலும் கட்டிப் போட்டிருக்கும் ஆதி குணசேகரனை எதிர்த்து இனி பெண்கள் தங்கள் ஆட்டத்தை தொடங்க உள்ளதாக கூறி சபதம் ஏற்றுள்ளனர்.

அதே சமயம் எங்க அண்ணன் இல்லைன்னா இந்த வீட்டில் எதுவுமே இல்ல. அவர அவமானப்பட நான் என்னைக்கும் விடமாட்டேன் என கதிரும், எங்க அண்ணன் செஞ்ச தப்புக்கு அவர் திருந்தனும்ன்னு நெனச்சனோ தவிர அவரு தோத்துப் போகணும்ன்னு நான் நினைக்கவே இல்ல என சக்தியும் பெண்களுக்கு எதிராக நிற்க தங்களது காரணத்தை கூறி நிற்கின்றனர்.