எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 17 எபிசோட்: தடம் மாறிய தர்ஷன்.. கொதித்தெழுந்த குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று!
குணசேகரன் கதிரிடம் தர்ஷனை நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது; குறித்த நேரத்தில் இந்த கல்யாணம் நடந்தே தீர வேண்டும் என்று ஆர்டர் போடுகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 17 எபிசோட்: தடம் மாறிய தர்ஷன்.. கொதித்தெழுந்த குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று!
எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில் தர்ஷன் கல்யாணம் வேண்டாம் என்று கூறிய நிலையில் அதிர்ந்து போன குணசேகரன் தர்ஷனை ஓங்கி அடித்து விட்டார். அதில் மயக்கம் போட்டு தர்ஷன் கீழே விழுந்தான். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தனர்.
தொடர்ந்து குணசேகரன் கதிரிடம் தர்ஷனை நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது; குறித்த நேரத்தில் இந்த கல்யாணம் நடந்தே தீர வேண்டும் என்று ஆர்டர் போடுகிறார். இந்த நிலையில் உள்ளே வந்த ஈஸ்வரி கதிரிடம் உங்கள் எல்லோரையும் விட எனக்கு என் பிள்ளை மீது அதிக உரிமை இருக்கிறது, அக்கறை இருக்கிறது என்று சொல்ல, நந்தினி அடிக்கப்பாய்ந்தான் கதிர்.