எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: ஆட்டத்தை ஆரம்பித்த ஆதி குணசேகரன்.. அதிரும் வீடு.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: வீட்டை பெண்கள் வெளியே போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆதி குணசேகரன் அனைவருக்கும் வேலை வைத்து வருகிறான்.

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், தன்னை அசிங்கப்படுத்திய பெண்களின் ஆட்டத்தை அடக்கி, அவர்களை தன் வீட்டிலேயே உட்கார வைப்பேன் என ஆதி குண சேகரன் தனக்கு தானே சபதம் ஏற்றான். இதையுடுத்து தன் அம்மா விஷம் குடித்ததாக அவர்களுக்கு சேதி சொல்லி இந்த வீட்டிர்கு வரவைக்க ஏற்பாடு செய்தான்.
பெண்களை பயன்படுத்திக் கொள்ளும் குடும்பம்
அவர்களும், தன் மாமியார் விசாலாட்சிக்கு இந்த மன உளைச்சல் வரவும் அவர் தற்கொலை செய்து கொல்லும் அளவுக்கு சென்றதை நினைத்து வருந்தி வீட்டிற்கு வந்தனர். இதை விசாலாட்சியும் தனக்கு சாகதகமாக பயன்படுத்தி வருகிறார்.
இந்த வீட்டிற்கு வந்த பெண்களை முதலில் அவர்களுடைய கணவர்களோடு சேர்த்து வைக்க பக்காவாக பிளான் போட்டு இந்த வீட்டிலேயே லாக் செய்ய நினைத்தார் ஆதி குண சேகரன். அது ஒர்க் அவுட் ஆகவே, வீட்டு வேலைகள் எல்லாம ்கொஞ்சம் கொஞ்சமாக பெண்களே இழுத்துச் செய்ய ஆரம்பித்தனர்,
பங்கு பிரித்துக் கொண்ட அம்மா- பையன்
இதனால், அவர்களை சமையல் கட்டிற்குள்ளேயே முடக்க நினைத்து அதற்கான வேலையை பார்த்து வருகிறார். அதே சமயம் தனக்கு பிடி கொடுக்காமல் இருக்கும் ஈஸ்வரியையும் ஜனனியையும் தன் கட்டத்திற்குள் வர வைக்க முயன்று வருகிறார்,
அதனால், ஜனனியை வீட்டை விட்டு வெளியே போக விடாமல் இருக்க அவரது அம்மாவின் உதவியை நாடினார். அதே வேளையில் ஈஸ்வரியை பார்த்துக் கொள்ளும் வேலையை அவரே எடுத்துக் கொண்டார், இதையடுத்து, ஜனனி காலையிலேயே வீட்டை விட்டு வெளியே கிளம்பிய நிலையில், வேண்டுமென்றே விசாலாட்சியிடம் போட்டுக் கொடுத்தார் ஆதி குண சேகரன்.
ஜனனியை தடுக்கும் விசாலாட்சி
இதுதான் சமயம் என எதிர்பார்த்துக் கொண்டிகுந்த விசாலாட்சி, ஜனனியை தன்னை பார்த்துக் கொள்ளுமாறும், பாத்ரூமிற்கு அழைத்துச் செல்லுமாறும் கூறி வேண்டுமென்றே வெளியே போகவிடாமல் தடுத்தார்.
இதைப் பார்த்து பெண்கள் எல்லாம் கோபப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஜனனியை அழைத்து விசாலாட்சி துணி துவைத்து போடுமாறும் கூறினார். அந்த சமயத்தில் வேண்டுமென்றே ஆதி குணசேகரன் அவருடைய துணியையயும் கொடுத்து துவைக்குமாறு கூறினார்.
துணி துவைக்க சொன்ன குணசேகரன்
அந்த சமயத்தில் ஆதி குணசேகரனின் திட்டத்தை அறிந்து கொண்ட ஜனனி, தன்னால் எதிர்த்து எதுவும் பேச முடியாமல் துணியை துவைத்து போட்டார். அவர் அந்த வீட்டில் வேலை செய்து கஷ்டப்படுவதை பார்த்து ஆதி குணசேகரன் ரசிக்கவம் செய்தார்.
இந்நிலையில், இதுவரை செய்யாத வேலையை ஜனனி செய்ததால், ஜனனிக்கு சோப்பு ஒத்துக் கொள்ளாமல் அலர்ஜி வந்தது. இதன் காரணமாக அவரால் சாப்பாடு கூட சாப்பிட முடியவில்லை. இதைப் பார்த்த மொத்த பெண்களுக்கும் கோபம் வந்தது. இதையடுத்து அவர்கள் வழியிலேயே சென்று அவர்களுக்கு பதிலடி தர பெண்கள் முடிவெடுத்துள்ளனர்.

டாபிக்ஸ்