எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: திட்டம் போட்டு காய் நகர்த்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: ஆதி குணசேகரன் பெண்கள் அத்தனை பேரையும் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து அத்தனை பேர் கனவையும் சிதைத்து லருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், விசாலாட்சியின் தற்கொலை முடிவுக்கு தாங்கள் காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த பெண்கள் எல்லாம் வீட்டிற்கு வந்தனர். அப்போது, அவர்கள் அத்தனை பேரையும் இதே வீட்டில் வைத்து அடிமையாக்க நினைத்த ஆதி குணசேகரன் தன் திட்டங்களை எல்லாம் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறார்.
கண்டுகொள்ளாத பெண்கள்
ஆதி குணசேகரனிந் திட்டம் எல்லாம் தெரிஞ்திருந்தும் பெண்கள் எல்லாம் அவர்களின் பிள்ளைகள் நலனுக்காக வீட்டிலேயே இருந்தனர். அத்தோடு நில்லாமல் முன்பு போல சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்ற வீட்டு வேலைகளை செய்யவும், பாதி நேரத்திற்கும் மேலாக சமையல் கட்டிலேயே நேரத்தை செலவழித்தனர். இதை நேரடியாக அவர்களிடம் ஜனனி சொல்லியும் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை.
விசாலாட்சியின் திட்டம்
இதையடுத்து, ஜனனியாவது தன் வேலையை செய்யலாம் என நினைத்தால் அதனை திட்டம் போட்டு தடுத்துள்ளார் ஆதி குணசேகரன். வீட்டில் இருக்கும் பெண்கள் இனி எதற்காகவும் இந்த வீட்டு வாசலை தாண்டக் கூடாது என முடிவெடுத்த ஆதி குணசேகரன் அதற்கான பொறுப்பை அவரது அம்மாவிடம் கொடுத்துள்ளார். இவர்கள் வீட்டுப் படியை தாண்டினால் மீண்டும் குடும்பத்திற்கு தேவையில்லாத பிரச்சனை வரும் என நினைத்து ஆதி குணசேகரனின் திட்டத்திர்கு சம்மதம் தெரிவித்தார்.
ஜனனிக்கு அதிகமான கேபம்
பின், ஜனனியை பெண்களுடன் அதிகம் இருக்க விடாமல் செய்தனர். அதையும் மீறி அவர் பெண்களோடு பேச வந்தால் வேறு ஏதாவது வேலையை வைத்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால், அத்தனை பேருக்கும் இது திட்டமிட்டே நடக்கும் சதி எனத் தெரிகிறது. இதனால் பெண்கள் அத்தனை பேருக்கும் ஆதி குணசேகரன் மீதும் அவரது அம்மா விசாலாட்சி மீதும் கோபம் அதிகரித்தது.
இந்நிலையில், ஜனனி வீட்டில் இருந்தால் சரிவராது என நினைத்து வேலைக்காக வெளியே கிளம்ப தயாரானாள். அதைப் பார்த்த ஆதி குணதசேகரன், அவரது அம்மாவை தூண்டிவிட்டு ஜனனியை தடுத்தார்.
புலம்பிய ஜனனி
அவரும் குண சேகரனின் திட்டத்திற்கு ஏற்ப தன்னை பாத்ரூமிபற்கு அழைத்து போ, தலைவலிக்கு தைலம் தடவி விடு, மருந்து எடுத்து கொடு என அடுத்தடுத்து வேலையை வாங்கி ஜனனியை வீட்டை விட்டு கிளம்பாத வண்ணம் பார்த்துக் கொண்டார். இதை நினைத்து ஜனனி புலம்பித் தள்ளினாள். இவர்கள் அத்தனை பேரும் நம்மை இந்த வீட்டு பெண்களாக பார்க்கவில்லை. அவர்கல் நம்மை சென்டிமண்டலாக அட்டாக் செய்வதாகவும் கூறினாள். இதனை மற்ற அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
ஈஸ்வரிக்கான ஸ்கெட்ச்
இதைத் தொடர்ந்து, ரேணுகா, நந்தினி, ஜனனி என 3 பேரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாளும் ஈஸ்வரியின் கவனத்தை தன் பக்கம ்திருப்பவே முடியவில்லை என நினைத்த ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தன் பக்கம் ஈர்க்க பல வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதில் முதல் பகுதியாக அவரே மாடியில் உள்ள தண்ணீர் தொட்டடியிில் இருந்து தண்ணீரை நிறுத்திவிட்டு, தண்ணீர் கேட்டு ஈஸ்வரியை அழைத்துக் கொண்டிருக்கிறார்.

டாபிக்ஸ்