எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: ஆதங்கத்தை கொட்டும் ஈஸ்வரி.. அழுத தர்ஷன்.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: தர்ஷன் வீட்டில் உள்ள பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் விதமாக பேசி வரும் நிலையில், ஈஸ்வரி அவனிடம் தன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷன் தன் அப்பா ஆதி குணசேகரனின் மொத்த தனக்கே கிடைக்கப் போகிறது என்பதற்காக காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறான். அத்தோடு நில்லாமல், தன் கல்யாணத்திற்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதற்காக அவளை தன் வருங்கால மாமியார் வீட்டாரின் துணையோடு ஆள் வைத்து அடித்து துன்புறுத்தி மிரட்டி உள்ளான்.
அறிவிழந்து பேசும் தர்ஷன்
இதனால், தர்ஷனை நினைத்து அவனது அம்மா ஈஸ்வரியும், தங்கை தர்ஷினியும் கூனிக் குறுகி நிற்கின்றனர். அதனால், அவனுடன் அதிகம் பேசுவதையே தவிர்த்து விட்டனர். இருப்பினும், வீட்டில் உள்ள ஆண்கள் தூண்டிவிடுவது கூட தெரியாமல் அவன் தன் சிந்திக்கும் திறனையே இழந்து நிற்கிறான். இதுபற்றி கேள்வி கேட்டால், தன் அம்மா ஈஸ்வரியை ஜீவானந்தத்தோடு ஒப்பிட்டு பேசி அசிங்கப்படுத்துகிறான். இதை எல்லாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புரியாததால் ஈஸ்வரி மனம் உடைந்து போனாள்.
தொடர் அவமானங்களை சந்திக்கும் பெண்கள்
இதையடுத்து, இந்த வீட்டில் இருந்து எந்தப் பலனும் இல்லை எனத் தெரிந்ததாலும், தொடர் அவமானங்களை சந்தித்தாலும் பெண்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அதன்பின், அவர்கள் குணசேகரனாலும் அறிவுக்கரசியாலும் தொடர் இன்னல்களுக்கு ஆளாகினர், இந்த சூழலில் தான் விசாலாட்சி விஷம் குடித்ததால் அனைவரும் அவரைப் பார்த்துக் கொள்வதற்காக வீட்டிற்குள் வந்தனர். அப்போது, அவர்களை இந்த வீட்டிற்குள் பூட்டி வைக்க திட்டம் தீட்டினார் குணசேகரன். அதை ஒவ்வொன்றாகவும் செயல்படுத்தவும் தொடங்கினார்.
மேலும் படிக்க| நிலாவை மூளை சலவை செய்யும் குடும்பம்.. அய்யனார் துணை சீரியல்
தர்ஷினியின் அட்வைஸ்
அதை அனைத்தையும் தெரிந்து கொண்ட தர்ஷினி தன் அம்மாவையும் சித்திகளை இந்த வீட்டை விட்டு வெளியே போய் ஏதாவது செய்து வாழ்க்கையில் முன்னேற சொல்லி அட்வைஸ் கொடுத்தாள். அதை கேட்காமல் அனைவரும் தர்ஷினியை சமாதானம் செய்து கொண்டிருந்ததை பார்த்த தர்ஷன், ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு போய் பேச ஆரம்பித்தான்.
ஆதங்கத்தை கொட்டிய ஈஸ்வரி
அப்போது தான் ஈஸ்வரி தர்ஷனிடம் தன் ஆதங்கத்தையும் தர்ஷனால் தனக்கு ஏற்பட்ட மன வலியையும் கூறி அழுதாள். அந்த சமயத்தில் அதை புரிந்து கொண்ட தர்ஷன் தன் அம்மாவை கட்டி அணைத்து அழுதான். இதனைப் பார்த்த மற்றவர்கள் தர்ஷன் இனி புரிந்து நடந்து கொள்வான் என நினைத்து ஆறுதல் அடைந்தனர்.
கதிரின் கோபம்
இதற்கிடையில், அறிவுக்கரசியை கொற்றவை கைது செய்து கூட்டிப் போனதை அறிந்தும் ஆதி குணசேகரன் எதுவும் செய்யாமல் இருப்பதை பார்த்து கதிருக்கு கோபம் ஏற்படுகிறது. இதை அண்ணனிடமே கேட்டும் விட்டான். இதை கொஞ்ச நாள் இப்படியே விடுமாறும், அறிவுக்கரசி விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்தான்.

டாபிக்ஸ்