எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 11 எபிசோட்: தவிக்கும் குணசேகரன்.. சாதிக்கும் ஈஸ்வரி.. தடம் மாறும் தர்ஷன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 11 எபிசோட்: தவிக்கும் குணசேகரன்.. சாதிக்கும் ஈஸ்வரி.. தடம் மாறும் தர்ஷன்!

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 11 எபிசோட்: தவிக்கும் குணசேகரன்.. சாதிக்கும் ஈஸ்வரி.. தடம் மாறும் தர்ஷன்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 11, 2025 11:46 AM IST

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 11 எபிசோட்: ஈஸ்வரியின் அப்பா ஜனனியின் ஹோட்டல் பிசினஸை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக நாகப்பன் என்ற ஒருவரை அழைத்து வந்தார்.

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 11 எபிசோட்: தவிக்கும் குணசேகரன்.. சாதிக்கும் ஈஸ்வரி.. தடம் மாறும் தர்ஷன்!
எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 11 எபிசோட்: தவிக்கும் குணசேகரன்.. சாதிக்கும் ஈஸ்வரி.. தடம் மாறும் தர்ஷன்!

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 11 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய ப்ரோமோவில் ஈஸ்வரியின் அப்பா ஜனனியின் ஹோட்டல் பிசினஸை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக நாகப்பன் என்ற ஒருவரை அழைத்து வந்தார்.

இந்த நிலையில் உள்ளே புகுந்த ஜான்சி ராணி, முன்பு மகள் குறித்து கன்னா பின்னாவென்று பேசி சென்ற நீங்கள், இன்று அன்பு கூர்ந்து வருவது எதற்காக என்று கேள்வியை போட அதற்கு பதிலடி கொடுத்த ஈஸ்வரியின் அப்பா, உண்மைதான் ஆனால் என்னுடைய மகளால் அதிக பாதிப்படைந்து இருக்கும் குணசேகரனே விட்டுக் கொடுத்துச் செல்லும் பொழுது, நான் விட்டுக் கொடுத்துச் செல்வதில் ஒன்றும் குறைந்து விடாது’ என்றார்.

நேற்றைய தினம் நடந்தது என்ன?

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் தாராவின் சடங்கு நிகழ்ச்சியில் ஜனனி தரப்பு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆடிவிட்டு வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்த அவர்களிடம் அவர்களது கணவன்மார்களும், குணசேகரனும் கொதித்து எழுவார்கள் என்று பார்த்தால், அனைவரும் அமைதியாக எதுவும் நடக்காதது போல காட்டிக் கொண்டனர்.

இந்த நிலையில் ஜனனி தரப்பு படுத்து உறங்க, குணசேகரன் மட்டும் உறங்காமல் ரூமிற்குள் தவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் உள்ளே புகுந்த கரிகாலன் அவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள் என்று சொன்னபோதும் அவர் எதுவும் பெரிதாக சத்தம் போடவில்லை.

மறுநாள் குணசேகரனும் அவனது தம்பிகளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, குணசேகரன் சொத்துக்களையெல்லாம் உங்களுக்கு கொடுத்துவிட்டேன்; நீங்கள் தான் ஒழுங்காக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார் இன்னொரு பக்கம் தர்ஷன் தேர்வுக்கு கிளம்ப எல்லோரும் அவளுக்கு ஆல் த பெஸ்ட் கூறினர். ஆனால் குணசேகரன் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.