எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 9 எபிசோட்: போட்டுக்கொடுத்த கரிகாலன்.. கதிகலங்கிய ஜனனி தரப்பு! - நடக்கப்போவது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 9 எபிசோட்: போட்டுக்கொடுத்த கரிகாலன்.. கதிகலங்கிய ஜனனி தரப்பு! - நடக்கப்போவது என்ன?

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 9 எபிசோட்: போட்டுக்கொடுத்த கரிகாலன்.. கதிகலங்கிய ஜனனி தரப்பு! - நடக்கப்போவது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 09, 2025 12:40 PM IST

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 9 எபிசோட்: போட்டுக்கொடுத்த கரிகாலன்.. கதிகலங்கிய ஜனனி தரப்பு! - நடக்கப்போவது என்ன?

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 9 எபிசோட்: போட்டுக்கொடுத்த கரிகாலன்.. கதிகலங்கிய ஜனனி தரப்பு! - நடக்கப்போவது என்ன?
எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 9 எபிசோட்: போட்டுக்கொடுத்த கரிகாலன்.. கதிகலங்கிய ஜனனி தரப்பு! - நடக்கப்போவது என்ன?

நேற்று நடந்தது என்ன?

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் தாராவின் பிறந்த நாளை ஜனனி தரப்பினர் விழா எடுத்துக் கொண்டாடினர். அதில் தாராவின் ஆசிரியர்கள், நண்பர்கள் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விருந்து வைத்து அந்த விழா கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது.

அப்போது ஜனனி உள்ளிட்டோர் தங்களின் வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர். இதற்கிடையே ஈஸ்வரி இந்த காலத்து இளைஞர்களுக்கு பொறுப்பு இல்லை என்றும் ஏதாவது ஒன்று பிடிக்கவில்லை என்றால் உடனே அதை கட் செய்து விடுகிறார்கள் என்றும் கூறினாள். இன்னொரு பக்கம் நந்தினி, அது உண்மை என்று ஒரு பக்கம் வைத்தாலும், நாம் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று கூறினாள்.

அப்போது உள்ளே வந்த தாரா நந்தினியை பேச அழைக்க, நந்தினி மேடையில் ஏறி பேசினாள். ஆனால் வீட்டில் பெண்கள் இல்லாத காரணத்தால் காபி போட கூட ஆள் இல்லை. இந்த நிலையில் கரிகாலன் வெளியே சென்று காபி வாங்கி வந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்தான். தொடர்ந்து வழக்கம் போல அவன் ஏறுக்கு மாறாக பேச, ஞானம் அவனை அடித்தான்.

இதற்கிடையே அங்கிருந்த தர்ஷன் லேப்டாப்பிற்கு வீடியோ லிங்க் ஒன்று வந்தது. அது என்ன என்று கரிகாலனை பார்க்கச் சொன்ன போது அது தாராவின் பர்த்டே என்ற பெயருடன் வந்தது. இந்த நிலையில் அதை பார்த்த கரிகாலன் வீட்டில் உள்ள அனைவருக்கும் போட்டு காண்பித்து விட்டான். சுதர்சன் வந்து அதை எடுக்க முயற்சித்த போதும் கரிகாலன் அதற்கு அனுமதிக்கவில்லை; எல்லோரும் அதை பார்த்து கடுப்பாகினர்