எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 3 எபிசோட்: அரிவாள் எடுத்த நந்தினி.. கலங்கிய தாரா.. நடக்கப்போவது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 3 எபிசோட்: அரிவாள் எடுத்த நந்தினி.. கலங்கிய தாரா.. நடக்கப்போவது என்ன?

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 3 எபிசோட்: அரிவாள் எடுத்த நந்தினி.. கலங்கிய தாரா.. நடக்கப்போவது என்ன?

Aarthi Balaji HT Tamil
Published Jun 03, 2025 11:04 AM IST

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 3 எபிசோட்: அறிவுக்கரசி வீட்டிலிருந்து சீர் செய்கின்றனர். ஆனால் இதனை நந்தினியால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தனது உச்சக்கட்ட கோபத்தினை வெளிப்படுத்துகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 3 எபிசோட்: அரிவாள் எடுத்த நந்தினி.. கலங்கிய தாரா.. நடக்கப்போவது என்ன?
எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 3 எபிசோட்: அரிவாள் எடுத்த நந்தினி.. கலங்கிய தாரா.. நடக்கப்போவது என்ன?

அதில், நந்தினியின் மகள் தாராவிற்கு சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நந்தினியின் தம்பியை கதிர் கடத்தி வைத்து இருக்கிறார். தம்பி வருவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நந்தினி.

இதனால் அறிவுக்கரசி வீட்டிலிருந்து சீர் செய்கின்றனர். ஆனால் இதனை நந்தினியால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தனது உச்சக்கட்ட கோபத்தினை வெளிப்படுத்துகிறார்.

கலங்கிய தாரா

அறிவுக்கரசி குடும்பத்தை அரிவாள் கொண்டு வெட்ட செல்கிறார் நந்தினி. இதனால் அங்கு பெரிய கலவரம் ஏற்படுகிறது. நந்தினி அரிவாள் தூக்கியதை பார்த்து அவரின் மாமியார் கடும் கோபம் கொள்கிறார். இதை எல்லாம் பார்த்து தாரா மனம் கலக்கம் அடைக்கிறது.

தன் மகளிடம், “ என்ன நடந்தாலும் உன் வாழ்க்கையில் ஒரு விஷயம் நிரந்தரம் என்றால் அது நான் உன்கூட நிறப்பது” என்றால் நந்தினி. இத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான பரோமோ முடிந்தது.

நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்தது

நேற்றைய ( ஜூன் 2 ) எபிசோட்டில் தாராவுக்கு பிடித்தது போல சடங்கு விழா நடக்க வேண்டும் என்று சக்தியிடம் ஜனனி தரப்பினர் முறையிட்டனர். இந்த நிலையில் சக்தி வீட்டிற்கு வந்திருக்கும் அறிவுக்கரசி சடங்கு விழாவில் பெரிதாக தலையிடக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்தான்.

அறிவுக்கரசி வீட்டிலிருந்து சீர்

இதைக்கேட்டு அதிருப்தி அடைந்த குணசேகரன், என்னை மதித்து, நான் கூறிய சொல்லை மதித்து அறிவுக்கரசி இங்கு வந்திருக்கிறாள். ஆகையால் அவள் இங்குதான் இருப்பாள் என்று கூறினார். இன்னொரு பக்கம் சக்தி தாராவை கட்டிப்பிடித்து தன்னால் எதுவும் வாங்கித் தர முடியவில்லையே என்று வருத்தப்பட்டான்.

தாராவிற்கு சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்யும் நிலையில், அறிவுக்கரசி வீட்டிலிருந்து சீர் செய்கின்றனர். ஆனால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நந்தினி உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்ந்துள்ளார்.

இன்னொரு பக்கம், கதிர் நெடுஞ்செழியனை சடங்கு விழாவிற்கு வருகை தராத வகையில் சில விஷயங்களை செய்வதாக காட்சிகள் காட்டப்பட்டன. மற்றொரு பக்கம் அப்பத்தா தாராவை அழைத்து தான் வாங்கிய துணியை கொடுத்து சடங்கு சுற்றிய பின்னர் அணிந்து கொள் என்று கூறினார்.

இந்த நிலையில் கோபமடைந்த நந்தினி முறைப்படி எங்கள் வீட்டில் இருந்து எங்கள் தரப்பினர் வாங்கிக் கொடுத்த துணியைதான் தாரா அணிய வேண்டும். அப்படி இருக்கையில், நீங்கள் இப்போது இப்படி சொல்வது முறையல்ல என்று சாடினாள். இதைக் கேட்டு அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழ் சினிமா ரீவைண்ட்: இளைஞர்களை கவர்ந்த கல்லூரி Reunion கதை.. ஜூன் 3ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்