எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 2 எபிசோட்: நெடுஞ்செழியனை கடத்திய கதிர்.. நம்பிக்கையில் சுற்றும் நந்தினி! - நடக்கப்போவது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 2 எபிசோட்: நெடுஞ்செழியனை கடத்திய கதிர்.. நம்பிக்கையில் சுற்றும் நந்தினி! - நடக்கப்போவது என்ன?

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 2 எபிசோட்: நெடுஞ்செழியனை கடத்திய கதிர்.. நம்பிக்கையில் சுற்றும் நந்தினி! - நடக்கப்போவது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 02, 2025 02:32 PM IST

எதிர்நீச்சல் சீரியல் மே 26 எபிசோட்: கதிர் நெடுஞ்செழியனை கடத்தியது உண்மை என்று தெரிந்து விட்டது. ஆம், கதிரின் ஆட்கள் நெடுஞ்செழியினை தன் வசம் வைத்துக்கொண்டு தாராவின் சடங்கிற்கு செல்லாமல் பார்த்துகொண்டனர்.

எதிர்நீச்சல் சீரியல் மே 26 எபிசோட்: நெடுஞ்செழியனை கடத்திய கதிர்.. நம்பிக்கையில் சுற்றும் நந்தினி! - நடக்கப்போவது என்ன?
எதிர்நீச்சல் சீரியல் மே 26 எபிசோட்: நெடுஞ்செழியனை கடத்திய கதிர்.. நம்பிக்கையில் சுற்றும் நந்தினி! - நடக்கப்போவது என்ன?

ஆனால், இது தெரியாமல் தன் தம்பி நிச்சயம் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் நந்தினி சடங்கிற்கான வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறாள். வீட்டில் பரபரப்பு தொத்திக்கொண்டது.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் தாராவுக்கு பிடித்தது போல சடங்கு விழா நடக்க வேண்டும் என்று சக்தியிடம் ஜனனி தரப்பினர் முறையிட்டனர். இந்த நிலையில் சக்தி வீட்டிற்கு வந்திருக்கும் அறிவுக்கரசி சடங்கு விழாவில் பெரிதாக தலையிடக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்தான்.

இதைக்கேட்டு அதிருப்தி அடைந்த குணசேகரன், என்னை மதித்து, நான் கூறிய சொல்லை மதித்து அறிவுக்கரசி இங்கு வந்திருக்கிறாள். ஆகையால் அவள் இங்குதான் இருப்பாள் என்று கூறினார். இன்னொரு பக்கம் சக்தி தாராவை கட்டிப்பிடித்து தன்னால் எதுவும் வாங்கித் தர முடியவில்லையே என்று வருத்தப்பட்டான்.

இன்னொரு பக்கம், கதிர் நெடுஞ்செழியனை சடங்கு விழாவிற்கு வருகை தராத வகையில் சில விஷயங்களை செய்வதாக காட்சிகள் காட்டப்பட்டன. மற்றொரு பக்கம் அப்பத்தா தாராவை அழைத்து தான் வாங்கிய துணியை கொடுத்து சடங்கு சுற்றிய பின்னர் அணிந்து கொள் என்று கூறினார்.

இந்த நிலையில் கோபமடைந்த நந்தினி முறைப்படி எங்கள் வீட்டில் இருந்து எங்கள் தரப்பினர் வாங்கிக் கொடுத்த துணியைதான் தாரா அணிய வேண்டும். அப்படி இருக்கையில், நீங்கள் இப்போது இப்படி சொல்வது முறையல்ல என்று சாடினாள். இதைக் கேட்டு அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர்.