அதே டெய்லர், அதே வாடகை.. நிலாவாக மாறிய எதிர்நீச்சல் ஜனனி - விஜய் டிவியின் புதிய சீரியலில் மதுமிதா சொன்ன முக்கிய விஷயம்
எதிர்நீச்சலில் இருந்து விலகிய மதுமிதா விஜய் டிவியில் நடித்து வரும் புதிய சீரியலில் அவரது லுக் மற்றும் கதாபாத்திரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் விலகியது குறித்த அப்டேட்டும் மதுமிதா சொல்லியுள்ளார்.

அதே டெய்லர், அதே வாடகை.. நிலாவாக மாறிய எதிர்நீச்சல் ஜனனி - விஜய் டிவியின் புதிய சீரியலில் மதுமிதா சொன்ன முக்கிய விஷயம்
சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்ட டிவி சீரியல்களில் முக்கியமான சீரியலாக சன்டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் இருந்து வந்தது. இந்த சீரயலின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இதையடுத்து இந்த சீரியலின் முதல் பாகத்தில் பிரதான கதாபாத்திரமான ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா இரண்டாம் பாகத்தில் இருந்து விலகியுள்ளார். இந்த கேரக்டரில் தற்போது பார்வதி வெங்கட்ராமன் என்பவர் நடித்து வருகிறார்.
விஜய் டிவி சீரியலில் மதுமிதா
எதிர்நீச்சல் சீரியல் மூலம் எதிர்நீச்சல் மதுமிதா பெயரெடுத்த இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடித்து வருகிறார். மதுமிதா நடிக்கும் புதிய சீரியலுக்கு அய்யனார் துணை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் மதுமிதாவின் கதாபாத்திரம் நிலா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
