தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ethirneechal Janani Done Accident In Chennai With Boy Friend

Ethirneechal Janani: ஆண் நண்பருடன் ராங் ரூட்டில் சென்று விபத்து ஏற்படுத்திய எதிர்நீச்சல் மதுமிதா.. போலீஸ் விசாரணை

Aarthi Balaji HT Tamil
Feb 27, 2024 08:20 AM IST

எதிர்நீச்சல் மதுமிதா ஆண் நண்பருடன் ராங் ரூட்டில் சென்று விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எதிர்நீச்சல் மதுமிதா
எதிர்நீச்சல் மதுமிதா

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் குடிபோதையில் கார் ஓட்டி நடிகை மதுமிதா விபத்து ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, சோழிங்கநல்லூரில் பகுதியில் இந்த விபத்து இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்து இருக்கிறது. அங்கிருக்கும் வழி பாதையில் தன்னுடைய ஆண் நண்பருடன் மதுமிதா ராங் ரூட்டில் சென்று உள்ளார். அப்போது எதிரே வந்த காவல் வாகனத்தின் மீது மதுமிதா கார் மோதி விபத்து ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

உடனே விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறார்கள். அப்போது தான் சரியாக தான் வந்தேன் என்றும் எதிரே வந்த காவல் துறையினரின் வாகனம் தான் வேகமாக வந்து காரில் மோதிவிட்டதாக சொல்லி உள்ளார் மதுமிதா. இந்த விபத்து தொடர்பாக மதுமிதாவிடம் யாராவது கேட்டால், “அது சின்ன விபத்து தான். மற்ற படி வேறு எதுமே இல்லை” என சொல்லிவிட்டாராம். மதுமிதா விபத்து ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் உடுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்