Ethirneechal Janani: மதுபோதையில் காவலர் மீது காரை ஏற்றினாரா எதிர்நீச்சல் ஹீரோயின்? மதுமிதா சொல்வது என்ன?
“இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது இந்த விபத்து குறித்த விவரங்கள் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன”

எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் உரிமையாக போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மதுமிதா, மதுபோதையில் தனது ஆண் நண்பருடன் கார் ஓட்டில் காவலர் மீது மோதிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பால் சுமார் 5 லட்சம் பேர் அவரை சமூகவலைத்தளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்றபோது காவலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் ஒன் வேயில் ராங் ரூட்டில் மதுமிதா சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த காவலர் மீது காரை மோதியதில் காவலர் படுகாயம் அடைந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கிய காவலரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையில், தற்போது இந்த விபத்து குறித்த விவரங்கள் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன.
சம்பவத்தன்று நடிகை மதுமிதாவும், அவரது ஆண் நண்பரும் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுவிட்டு காரில் திரும்பி வந்துள்ளனர். இருவரும் மது அருந்தி இருந்த நிலையில், காரை மதுமிதா ஓட்டியதாகவும், அப்போது மது போதையில் இருந்த நடிகை மதுமிதா போலீஸ்காரர் மீது மோதிவிட்டதாகவும் கூறப்படுகிறது
இருவரையும் விசாரித்த நிலையில், எதிரே வந்த போலீசார் மீது தவறு என மதுமிதா கூறியதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய காரை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுமிதா வாங்கி உள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ள நடிகை மதுமிதா, அது ஓரு சின்ன விபத்து, அதை என் நண்பர்தான் செய்தார். அதை பற்றி பேச ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார். அந்த நண்பர் கேரளாவை சேர்ந்தவர் என்பது, சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.
