Story of Song : ஒத்துக்கொள்ளாத இளையராஜா.. மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.. என்னை தாலாட்ட வருவாளா? பாடல் கதை!-ennai thalatta varuvala song story in the movie kadhalukku mariyadhai - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Story Of Song : ஒத்துக்கொள்ளாத இளையராஜா.. மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.. என்னை தாலாட்ட வருவாளா? பாடல் கதை!

Story of Song : ஒத்துக்கொள்ளாத இளையராஜா.. மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.. என்னை தாலாட்ட வருவாளா? பாடல் கதை!

Divya Sekar HT Tamil
Feb 07, 2024 05:45 AM IST

Kadhalukku Mariyadhai : காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்ற என்னை தாலாட்ட வருவாளா? பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

என்னை தாலாட்ட வருவாளா? பாடல் கதை
என்னை தாலாட்ட வருவாளா? பாடல் கதை

விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்த படமாகவும், அவரன் ஃபேன் பேஸையும் அதிகரித்த படம். இந்த படத்துக்குப்பின் 80ஸ் கிட்ஸ்கள் விஜய் பின்னாடி ஓடினர். இன்று வரை 2024 கிட்ஸ் வரை அவருக்கு ரசிகர்களை உருவாக்கியுள்ளது இந்தப்படத்தின் வெற்றி. இந்தப்படத்தில் ஷாலினி கதாநாயகியாக நடித்திருப்பார்.

இந்த படத்தில் இடம்பெற்ற என்னை தாலாட்ட வருவாளா? பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

”என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவும் பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவள் பெயரில் மாற்றினாள்”

இந்த பாடலைக் கண்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லலாம். அப்படி அனைவரின் மனதையும் உருக வைத்த ஒரு பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கும். இந்த பாடல் எப்படி உருவானது தெரியுமா. இப்படத்தில் கதைக்கான சூழலை சொல்லி பாடல்கள் அனைத்தையும் எழுதி அதற்கான மெட்டையும் அமைத்து விட்டார் இளையராஜா. ஆனால் அப்போது இந்த பாடல் படத்தில் கிடையாது. இந்த படத்தின் கதைப்படி காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு இடத்தில் தஞ்சமடைந்த பிறகு இரு வீட்டருக்கும் நடக்கும் பிரச்சனையை பார்த்து இருவரும் ஏன் அனைவருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டும் நாம் பிரிந்து விடுவோம் என எண்ணி பிரியும்போது ஒரு நான்கு வரியில் ஒரு மெட்டு போடலாம் என இயக்குநர் பாசில் இளையராஜாவிடம் சொல்கிறார்.

இதை கேட்ட இளையராஜாவும் ஓகே என சொல்லி அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மெட்டு அமைத்து பாடலை உருவாக்குகிறார். இதனைக் கேட்ட பாசிலுக்கு இந்த பாடலை முழு பாடலாக அமைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் தோன்றியுள்ளது. இதனை இளையராஜாவிடம் போய் சொல்கிறார். இந்த பாடலை காதலன் காதலிக்காக பாடுவது போல் இருந்தால் மிக அருமையாக இருக்கும். எனவே முழு பாடலாக இது கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த நான்கு வரி மெட்டு என்னை மயக்கி விட்டது. அதனால் கண்டிப்பாக மக்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். எனவே முழு பாடலாக இருந்தால் அருமையாக இருக்கும் என சொல்கிறார்.

இதனை கேட்ட இளையராஜாவும் அதற்கு ஏற்றார் போல பழனி பாரதி வரிகள் எழுத மெட்டுக்கள் அமைத்து தருகிறார். பிறகு பாசிலுக்கு இந்த பாடலை டைட்டில் சாங்காக வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அது எப்படி சாத்தியம் என இளையராஜா கேட்கிறார். அதாவது அந்த பாடல் ஷாலினி குழந்தையாக இருக்கும்போது அவரை குடும்பமே கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும் என்று பாசல் கேட்கிறார். இதற்கு தான் இளையராஜா இது எப்படி சாத்தியம் காதலுக்காக பாடிவிட்டு இப்போது குடும்பம் கொண்டாடும் சூழலில் இந்தப் பாடல் அமைவது எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கேட்கிறார் இளையராஜா.

அதற்கு பாசில் இந்த பாடல் வரும்போது மக்கள் அந்த சூழ்நிலையை பார்க்க மாட்டார்கள். இப்பாடல் அனைவரையும் மயக்கிவிடும் அதனால் அதனை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் அந்தப் பாடலை ரசிக்கத்தான் செய்வார்கள். எனவே இந்த பாடல் டைட்டில் சாங்காக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கூறி இந்த பாடலை டைட்டில் சாங் ஆக அமைத்து இருப்பார்கள். இப்படி தான் இந்த பாடல் உருவானது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.