தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Engagement Is Really Over And What Is The Background Of Vijayakanths Son Vijayaprabhakaran

Vijayaprabhakaran: விஜயகாந்தின் மூத்த மகனுக்கு நிச்சயம் ஆகிவிட்டதா? - உண்மை நிலவரம் என்ன?!

Marimuthu M HT Tamil
Jan 08, 2024 10:47 PM IST

விஜயகாந்தின் மூத்த மகனுக்குத் திருமண நிச்சயம் நடைபெற்றதா என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் மகனுக்கு உண்மையில் நிச்சயம் முடிந்ததா? - நடந்தது என்ன?
விஜயகாந்த் மகனுக்கு உண்மையில் நிச்சயம் முடிந்ததா? - நடந்தது என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் விஜயபிரபாகரனுக்கு நிச்சயம் முடிந்துவிட்டதாகவும் விஜயகாந்த் உடல் நலம்பெற்றவுடன் திருமணம் நடத்த திட்டமிட்டதாகவும்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டதாகவும் பலரும் தெரிவித்து வந்தனர்.

ஆனால், அந்த தகவலில் உண்மை இல்லை எனத் தற்போது தெரியவந்துள்ளது.

விஜயகாந்துக்கு உடல்நலம் நன்றாக இருக்கும்போதே விஜயபிரபாகரனுக்குத் திருமணத்திற்குப் பெண்பார்க்கும் நடந்துள்ளதாகவும்; அப்போது கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணை பார்க்க விஜயபிரபாகரன் மற்றும் அவரது தாய் பிரேமலதா மிக எளியமுறையில் சென்றது உண்மை எனவும் தெரிகிறது. ஆனால், அப்பெண்ணின் வீட்டில் இருந்து கசிந்த தகவலால் அங்கு மீடியாவினர் ஒன்றுகூடிவிட்டனராம். இதுகுறித்து பிரேமலதா பெண்வீட்டாரிடம் கேட்டதற்கு தங்களுக்கு இதுகுறித்து தெரியாது எனக் கூறிவிட்டனராம். மேலும் பெண் பார்க்கும் படலத்திற்கே பெரியளவில் கூட்டத்தைப் பெண்கள் வீட்டில் கூட்டிவிட்டனராம். இந்த ஆடம்பரத்தைக் கண்டு அதிர்ந்துபோன பிரேமலதா, அந்த சம்பந்தத்திற்கு ஓகே சொல்லவில்லையாம். அப்போது பெண்ணின் உறவினர்கள் ஆர்வமிகுதியில் விஜயபிரபாகரனுடன் தங்களது வீட்டுப் பெண் இருக்கும் புகைப்படத்தைப் போட அப்படம் இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

ஆனால், அப்போதே விஜயபிரபாகரனுக்கு திருமணத்தை முடித்து இருந்தால் விஜயகாந்த் தனது மகனுக்குத் திருமணம் செய்துவைத்ததைப் பார்த்த திருப்தியாவது கிடைத்திருக்கும் என அவரது ரசிகர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.