அடித்து ஆடும் ஷாருக்கானின் 'Dunki'..உலகம் முழுவதும் வசூல் எவ்வளவு தொியுமா?
Dunki Box Office Collection: ஷாருக்கானின் 'டன்கி' திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது.
'பதான்', 'ஜவான்' படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘டன்கி’. இதில் டாப்ஸி, போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த டிசம்பா் 21-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகியது.
ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. நகைச்சுவை கலந்த திரைப்படமாக வெளிவந்துள்ள 'டன்கி' ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது.
இந்த நிலையில், 'டன்கி' படம் உலக அளவில் ரூ.444.44 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக ரெட் சில்லிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷாருக்கானின் மூன்றாவது பிளாக்பஸ்டர் படமாக இது அமைந்துள்ளது.
'பதான் ', ' ஜவான் ' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கான் 'டங்கி' படம் மூலம் ஹிட் கொடுத்திருக்கிறாா். பதான் ரூ.1,050.30 கோடியும், ஜவான் ரூ.1,148.32 கோடியும் வசூல் ஈட்டியிருந்த நிலையில், டங்கி உலகம் முழுவதும் ரூ.444 கோடி வசூலை கடந்துள்ளது. டன்கியின் இந்த வெற்றியின் மூலம், ஷாருக்கான் 2023 ஆம் ஆண்டில் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
நட்பு, வீடு மற்றும் காதல் பற்றிய ஏக்கம் ஆகியவற்றின் கதையாக சித்தரிக்கப்பட்டிருந்தது டன்கி. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனில் குரோவர், இப்படத்தில் நடித்தது குறித்து ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அதில், “இந்த படங்களைப் பார்க்கும்போது, நான் உண்மையில் உண்மையானவர்களுடன் வேலை செய்ய எத்தனை படப்பிடிப்பு நட்சத்திரங்களை எண்ணியிருப்பேன் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். நான் இப்போது உணரும் நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது வழிகாட்டியான ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி சாருக்கும், இந்த வாய்ப்பை வழங்கிய ஜாம்பவான்களுக்கு ஒரு பெரிய நன்றி.” என்று தொிவித்துள்ளாா்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்