Tamil News  /  Entertainment  /  Dunki Box Office Collection Day 13: Dunki Has Made 200 Crore In India In Just 13 Days. The Movie Features Shah Rukh Khan

Dunki Box Office: ஹாட்ரிக் ஹாட்ரிக்.. 400 கோடியை கைவசப்படுத்திய ஷாருக்! - டங்கி இந்திய வசூல் எவ்வளவு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 03, 2024 05:10 PM IST

இந்தியாவில் மட்டும் 200 கோடியை கடக்கவுள்ளது !

இந்தியாவில் மட்டும் 200 கோடியை கடக்கவுள்ளது!
இந்தியாவில் மட்டும் 200 கோடியை கடக்கவுள்ளது!

ட்ரெண்டிங் செய்திகள்

பதான், ஜவான், இப்போது டங்கி என ஷாருக்கான் கடந்த ஆண்டு முழுவதும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய இடத்தை பிடித்து மீண்டும் தான் பாலிவுட் பாட்ஷாதான் என நிரூபித்து இருக்கிறார். 

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பதான் 1,050.30 கோடி வசூலித்தது, ஜவான் அவரது வாழ்நாள் வசூல் சாதனையாக 1,148.32 கோடி வசூலித்தது. இப்போது டங்கி 400 கோடியைத் தாண்டியுள்ளது. 

பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இந்தப்படம் தாயகத்தை இழந்து வாடும் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்கையை நெருக்கமான உணரும் படைப்பாக அவர்களின் வலியைப் பேசும் படைப்பாக வெளியானது. 

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகினார்கள். ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.