'எதையும் ஸ்லோவாயிட்டு செய்யும்.. பட்சே சரியாயிட்டு செய்யும்' தீபாவளி ரேஸில் தப்பித்த பாஸ்கர்!
பொருளாதார குற்றப் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம், வெளியான11வது நாளில் ரூ. 76 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி பொருளாதார குற்றப் பின்னணியை மையமாக வைத்து இயக்கிய படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
பான் இந்தியா படம்
அக்டோபர் 31ம் தேதி, துல்கரின் லக்கி பாஸ்கர் திரைப்படம் பான்-இந்தியா படமாக வெளியிடப்பட்டது. அவர் ஒரு நடுத்தர வர்க்க வங்கி ஊழியர் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்து, அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டடையும் பெற்றுள்ளார். இதனால், இந்தப் படம் மெல்ல மெல்ல ரசிகர்களைக் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
அதன்படி, வெங்கி அட்லூரி இயக்கிய லக்கி பாஸ்கர் படம், முதல் நாளில் ரூ. 7.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்த நிலையில், தெலுங்கில் 31.38 கோடி ரூபாயும், தமிழில் 8.85 கோடி ரூபாயும், இந்திய அளவில் 56.8 கோடி ரூபாயும், உலகளவில் 76.8 கோடி ரூபாய் வசூலும் பெற்றுள்ளதாக sacnilk.com இணையதளம் தெரிவித்துள்ளது.
