Aakasam Lo Oka Tara: 'ஆகாசம்லோ ஒக தாரா’: துல்கர் சல்மானின் பிறந்தநாளில் கவிதையாய் வெளியான புது பட ஃபர்ஸ்ட் லுக்
Aakasam Lo Oka Tara: துல்கர் சல்மானின் பிறந்தநாளில் கவிதையாய் வெளியான புது பட ஃபர்ஸ்ட் லுக் ஆன, ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படம் குறித்த பலரும் பாஸிட்டிவ் ஆன கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Aakasam Lo Oka Tara: துல்கர் சல்மான் தனது 41ஆவது பிறந்தநாளில் இருக்கும்வேளையில், அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
துல்கர் சல்மான், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டியின் இளைய மகன் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நாக் அஸ்வினின் கல்கி 2898 AD, படத்தில் சிறப்புத்தோற்றத்தில் தோன்றிய துல்கர் சல்மான், இப்போது தனது அடுத்த படத்திற்காக முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் தோற்றமளிக்கிறார்.
துல்கர் சல்மான், ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் 41ஆவது பிறந்தநாளை துல்கர் கொண்டாடி வரும் வேளையில், அவரை கவுரவிக்கும் விதமாக, தயாரிப்பு நிறுவனமான ஸ்வப்னா சினிமா, துல்கர் சல்மானுடன், தங்கள் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. அப்படத்தின் பெயர் ’ஆகாசம்லோ ஒருக தாரா’ என்பதாகும். இப்படம் துல்கர் சல்மானின் நேரடி தெலுங்கு படமாகவும், அதன் டப்பிங் வெர்ஷன்களை தமிழ், மலையாளம், இந்தியிலும் பார்க்கலாம்.
’ஆகாசம் லோ ஒக தாராவை’ பாராட்டிய ரசிகர்கள்:
இந்தப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மேகமூட்டமான வானிலையில் ஒரு கிராமத்தின் அமைதியான காட்சி தென்படுகிறது.
அதே நேரத்தில் துல்கர் பாரம்பரிய குர்தா மற்றும் சிவப்பு துண்டை அணிந்திருப்பதைக் காணலாம். அதன் பின்னணியில், ‘ஆகாசம் லோ ஒக தாரா’ என்று படத்தின் தலைப்பு இடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்வப்னா சினிமா நிறுவனம் செய்த எக்ஸ் தளப் பதிவில், "உங்கள் இதயத்தை உயரச் செய்யும் ஒரு கதையால்(AakasamLoOkaTara) நம் அனைவரையும் மயக்கும் எங்கள் நட்சத்திரம் துல்கர் சல்மானுக்கு ஒரு பிளாக்பஸ்டர் பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளது.
இதைப் பார்த்த சமூக வலைதளப் பயனர் ஒருவர், "ஆல் தி பெஸ்ட் ஸ்வப்னா சினிமா" என்று கருத்து உரைத்துள்ளார். மற்றொரு ரசிகர், "பிறந்தநாள் வாழ்த்துகள்.. துல்கர் ஆல் தி வெரி பெஸ்ட்.." என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், "ஹேப்பி பர்த்டே துல்கர் அண்ணா" என்று கமெண்ட் செய்துள்ளார். ஒரு ரசிகர் துல்கரை பாராட்டி, "எனவே, துல்கர் மீண்டும் சிறந்த நடிகர் விருதுக்கு வர இருக்கிறார். ஆல் தி பெஸ்ட்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆகாசம்லோ ஒக தாரா எத்தகைய படம்:
‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்னும் தெலுங்கு திரைப்படத்தை, பவன் சதினேனி இயக்குகிறார். இந்தப் படம் உணர்வு மற்றும் காதல் கலந்த கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைட் பாக்ஸ், ஸ்வப்னா சினிமாஸ், வைஜெயந்தி மூவிஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சந்தீப் குணம் மற்றும் ரம்யா குணம் ஆகியோரின் ஆதரவுடன் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 2025ஆம் ஆண்டில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.
வெங்கி அட்லூரி எழுதி இயக்கி வரும் படமான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தில், ‘துல்கர் சல்மான்’நடித்துள்ளார்.
துல்கர் சல்மான், தனது பிறந்த நாளை ஒட்டி, இன்று லக்கி பாஸ்கர் படத்தில் இருந்து 90களின் பீட் என்னும் பாடலை, தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டார்.
‘லக்கி பாஸ்கர்’ படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஹைப்பர் ஆடி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 7, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது.
