Dulquer Salmaan: ‘Thug Life’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்.. என்ன காரணம்?
Dulquer Salmaan vs Thug Life: 'நாயகன்' படத்துக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைப்' படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகியுள்ளது தற்போது கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த நடிகர் கமல்ஹாசன் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது தக் லைஃப் (Thug Life) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
'நாயகன்' படத்துக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது. கமல்ஹாசனின் 234 ஆவது படமான இதில், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் உள்பட பலா் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கேங்ஸ்டா் கதையில் உருவாகும் இந்தப் படத்தின் புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. பின்னர் கமல்ஹாசன் சொந்த வேலை காரணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றதால் சின்ன பிரேக் விடப்பட்டது.
இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்க இருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுதி வருகிறது. மற்ற படப்பிடிப்பு தேதிகளுடன் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பும் வருவதால் துல்கர் சல்மான் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக துல்கர் சல்மானின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “ஆம். செய்தி உண்மைதான். படத்திலிருந்து துல்கர் விலகிவிட்டார்.
துல்கர் சல்மானின் மற்ற படப்பிடிப்பு தேதிகளுடன் இப்படத்தின் ஷெட்யூல் ஒரே நேரத்தில் வர இருப்பதால் தேதிகள் ஒதுக்க முடியாத காரணத்தால் அவர் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார். ‘சூர்யா 43’, ‘காந்தா’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்கள் துல்கர் சல்மானுக்கு வரிசைகட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்