Tamil News  /  Entertainment  /  Dulquer Salmaan Opens About Sita Ramam 50 Days
துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

கனவு நனவாகிவிட்டது - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி

23 September 2022, 16:17 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 16:17 IST

சீதா ராமம் படம் வெளியாகி 50 நாளான நிலையில் துல்கர் சல்மான் அது குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான், மிருனால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதா ராமம். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

தேசப்பற்று, காதல், பிரிவு, சோகம், ஏமாற்றம் என அனைத்து கலந்த கலவையான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் சீதா ராமம் திரைப்படம் இன்று (செப் 23) 50 ஆவது நாள் கொண்டாடி வருகிறது. இது குறித்து துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "சீதா ராமம் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிய நிலையில் திரையரங்குகளில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைவிட பெரிதாக என்ன நான் கேட்கப் போகிறேன்!

ஒரு கனவு நனவான தருணம் போல் இருக்கிறது. எனது படமான சுப் திரைப்படம் வெளியாகும் நாளான இன்று, சீதா ராமம் திரைப்படம் 50 வது நாள் கொண்டாட்டத்தை எட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்