ராம்கி சாரின் ஹேர்ஸ்டைலுக்கு நான் எல்லாம் பெரிய ரசிகன்.. ஓபனாகப் பேசிய துல்கர் சல்மான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ராம்கி சாரின் ஹேர்ஸ்டைலுக்கு நான் எல்லாம் பெரிய ரசிகன்.. ஓபனாகப் பேசிய துல்கர் சல்மான்

ராம்கி சாரின் ஹேர்ஸ்டைலுக்கு நான் எல்லாம் பெரிய ரசிகன்.. ஓபனாகப் பேசிய துல்கர் சல்மான்

Marimuthu M HT Tamil Published Oct 23, 2024 02:54 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 23, 2024 02:54 PM IST

ராம்கி சாரின் ஹேர்ஸ்டைலுக்கு நான் எல்லாம் பெரிய ரசிகன் என ஓபனாக துல்கர் சல்மான் பேசியுள்ளார்.

ராம்கி சாரின் ஹேர்ஸ்டைலுக்கு நான் எல்லாம் பெரிய ரசிகன்.. ஓபனாகப் பேசிய துல்கர் சல்மான்
ராம்கி சாரின் ஹேர்ஸ்டைலுக்கு நான் எல்லாம் பெரிய ரசிகன்.. ஓபனாகப் பேசிய துல்கர் சல்மான்

லக்கி பாஸ்கர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் துல்கர் சல்மான் அதுகுறித்து பேசியதாவது, ‘’பெரிய கேப்-க்கு அப்புறம் என்னோட படம் தியேட்டரில் வருது. பாஸ்கர் எல்லோர் கூடயேயும் கனெக்ட் ஆகும். வீட்டில் வேலை செய்யும் நபராக இருக்கும் பாஸ்கர், தன் வருமானத்துக்காக ஒன்றைச் செய்கிறார். அது நம்ம ட்ரெய்லரிலேயே தெரியும். நீங்கள் படம் பார்க்கும்போது கனெக்ட் ஆவீங்க. இந்தப் படத்தின் சூட்டிங் பற்றி பேச நிறைய மெமரிஸ் இருக்கு.

1999-ல் தான் சென்னைக்கு வந்தேன். ராம்கி சார் நடித்த படங்களின் பாடல்கள் அப்போது மிகப்பெரிய ஹிட் கொடுத்த வண்ணம் இருந்தன. சின்ன வயசில் நான் பார்த்து ரசித்த ஆட்கள் கூட நடிக்க வாய்ப்புக் கிடைப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம். அவர் வரும்போது எல்லாம் பாஸிட்டிவ் ஆக இருப்பார். ஹெல்த் கான்சியஸாக இருப்பார். வீட்டுக்கு எல்லாம் வந்திருக்கார்.

ரொம்ப முக்கியமான கேரக்டர். 20 நிமிஷத்தில் இருந்து கடைசி வரைக்கும் இருப்பார். ராம்கி சார் ஷாட்டுக்கு முன்பு ஒரு இரண்டு சீவு சீவுவார். பார்க்கிறதுக்கு அழகாக இருக்கும். உங்களுடைய முடிக்கும் ஹேர்ஸ்டைலுக்கும் நாங்க ரொம்ப ரசிகர்கள் சார்.

ராம்கி உடனான பந்தம் குறித்து பேசிய நடிகர் துல்கர் சல்மான்:

ராம்கி சாருக்கும் எனக்கும் நிறைய சீன்கள் இருந்தன. பாஸ்கரின் வாழ்க்கையை மாத்துறது தான், ராம்கி சாரோட கேரக்டர் தான். இரண்டுபேருக்கும் இடையில் படத்தில் ஒரு பந்தம் இருந்தது. அது எனக்கு ஆஃப் ஸ்கிரீனிலும் இருந்தது. முதல் தடவை கேட்டதில் இருந்து இதுவரைக்கும் இப்படம் என்பது என்னுடைய இரண்டு வருட பயணத்தில் முக்கியமானது.

எனக்கு நிறைய லாஜிக் கேள்விகள் இருக்கும். நான் ரொம்ப இர்ரிட்டெட்டிவ். எனக்கு என்னவோ, டைரக்டர் வெங்கி அட்லூரி சொந்தக்கார பிரதர் மாதிரி தான். அந்த சுதந்திரத்தில் தான் படத்துக்காக அப்படி செய்தேன். மணி சார்கிட்ட எல்லாம் இதைப் பண்ணமாட்டேன். உங்கள் கிட்ட தான், அதை செய்ய முடியும்.

எங்களோட சினிமாவில் ஹீரோயின் மீனாட்சி செளத்ரி. இப்போது பெரிய நடிகையாக இருக்காங்க. காலையில் ஒரு படத்தின் சூட்டில் இருக்காங்க. நைட் ஒரு படத்தில் சூட்டில் இருக்காங்க. ரொம்ப டெடிக்கேட்டிவ் ஆன நடிகை. சமீபத்தில் கோட் படத்தில் எல்லாம் பார்த்திருப்பீங்க.

லக்கி பாஸ்கர் படத்தில் தி கோட்டில் நடிச்ச மீனாட்சி செளத்ரி:

இந்தப் படத்தில் படம் முழுக்க மீனாட்சி செளத்ரி இருக்காங்க. ரொம்ப முக்கியமான ரோல். என் பையனா ரித்விக் நடிச்சிருக்கார். இந்தப் படத்திலேயே ரொம்ப திறமையான பையன் ரித்விக் தான். ரித்விக்கிற்கு ரீடேக்கே இல்லை. சின்ன வயசாக இருந்தாலும் தவறா எந்த டயலாக்கும் பேசிடமாட்டார். ஒரே ஒரு நாள் சின்னதா மாத்தி சொன்னதும், எங்களுக்கெல்லாம் ரித்விக்கும் சராசரி பையன் தான்னு புரிஞ்சது.

இந்தப் படம் நிறைய பேருக்கு கனெக்ட் ஆகும். நம்ம குடும்பத்தில் பாஸ்கர் மாதிரி ஒருத்தர் இருப்பார். ஒரு இந்தியனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தொடர்பான கதை. எனக்கு ஒரு சந்தோஷம், திரும்பவும் ஒரு படம், ‘காந்தா’ அப்படின்னு. அது 40 விழுக்காடு முடிஞ்சிருக்கு. மீண்டும் அது ஒரு பிரீயட் படம். அடுத்தடுத்த படங்களில் நடப்பு காலத்தில் நடக்கும் கதையில் நடிப்பேன். அதைக் கூட நீங்கள் எஞ்சாய் பண்ணுவீங்க. நானும் ராணா டகுபதியும் சேர்ந்து தான் புரொடியூஸ் செய்றோம். தி ஹண்ட் ஃபார் வீரப்பன் நெட்பிளிக்ஸில் வந்தது இல்லையா, அதன் இயக்குநர் செல்வராஜ் செல்வமணி தான் இயக்கிட்டு இருக்கிறார். வரும் அக்டோபர் 31 தீபாவளி அன்று நிறையப் படங்கள் வருகிறது. எங்கள் படத்துக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க’’ என துல்கர் சல்மான் பேசி முடித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.